Home
Mobile

நீ கலக்கு சித்தப்பு.. ரூ.10,000 டிஸ்கவுண்ட்-ஐ பெற்ற 16GB ரேம், Super Moon கேமரா, 120W சார்ஜிங் போன்!

ஒன்பிளஸ் நிறுவனம் பெரியப்பா என்றால்.. ஐக்யூ நிறுவனம் சித்தப்பா தானே? ஒவ்வொரு ஆண்டும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் போதெல்லாம்.. அதை விட மலிவான விலைக்கு ஆனால் "கிட்டத்தட்ட" அதே அம்சங்களுடன் தனது லேட்டஸ்ட் மாடலை இறக்குவது ஐக்யூ நிறுவனத்தின் வழக்கமாகும்.

கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) அறிமுகமான போது, அதற்கு வேட்டு வைக்கும் விலை மற்றும் அம்சங்களுடன் ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) அறிமுகமானது. இந்தாண்டும் கூட ஒன்பிளஸ் 13 (OnePlus 13) அறிமுகமாகிய வேகத்தில் ஐக்யூ 13 (iQOO 13) அறிமுகமாகி அதகளம் செய்துள்ளது.

நீ கலக்கு சித்தப்பு.. ரூ.10,000 டிஸ்கவுண்ட்-ஐ பெற்ற iQOO போன்!

ஒன்பிளஸ் மற்றும் ஐக்யூ நிறுவனத்திற்கு இடையேயான இந்த போட்டா போட்டிக்கும்.. ரூ.10,000 டிஸ்கவுண்ட் பெற்ற ஸ்மார்ட்போன் என்கிற இந்த கட்டுரைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? கண்டிப்பாக இருக்கிறது! ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தின் விளைவாக ஐக்யூ 12 5ஜி மீது அபாரமான டிஸ்கவுண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில், ஐக்யூ 12 5ஜி மீது மொத்தம் ரூ.10,000 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 12% நேரடி தள்ளுபடியை பெற்று, அசல் விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3000 டிஸ்கவுண்டும் கிடைக்கிறது.

இந்தியாவில் புதிய ஐக்யூ 13 அறிமுகமாகி விட்ட இந்த நேரத்தில் சற்றே பழைய ஐக்யூ 12 5ஜி மாடலை நம்பி வாங்கலாமா? இந்தியாவில் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது அமேசான் இந்தியா மற்றும் ஐக்யூ இ-ஸ்டோர் வழியாக டிசம்பர் 11 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. அறிமுக சலுகையாக, எச்டிஎப்சி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும் என்றும், விவோ மற்றும் ஐக்யூ மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

ஐக்யூ 12 5ஜி VS ஐக்யூ 13 5ஜி அம்சங்கள்: ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் குவாட்-எச்டி LTPO AMOLEDடிஸ்பிளே, அந்த நேரத்தில் லேட்டஸ்ட் குவால்காம் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப், 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி ஆஸ்ட்ரோகிராஃபி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 100எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் உடனான 64எம்பி 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. இதன் ப்ரைமரி கேமரா மற்றும் டெலிஃபோட்டோ கேமரா ஆகிய இரண்டுமே சூப்பர் மூன்மோட்-ஐ தரிக்கின்றன.

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் முன்பக்ககேமராவை பொறுத்தவரை - 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதுதவிர்த்து ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவு உடன் 5000mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

புதிய ஐக்யூ 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2K LTPO AMOLED டிஸ்பிளே, தற்போதைக்கு குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப், 12ஜிபி வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜ்-ஐ கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் மூன்று 50எம்பி கேமராக்கள் (ப்ரைமரி + அல்ட்ரா வைட் + டெலிஃபோட்டோ), முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக இது 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவு உடனான சற்றே பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 5G Discount Price Rs 49999 in Amazon Due to New iQOO 13 5G India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X