பாத்துபாத்து செதுக்கிருக்காங்க! 200W ஃபாஸ்ட் சார்ஜிங்! 16GB ரேம், 1TB மெமரி! ஒவ்வொன்னும் டாப்பு டக்கருங்க!
ஒரு போனில் எவ்வளவு அம்சங்களை கொடுக்க முடியுமோ அவ்வளவு அம்சங்களுடன் ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் ஐக்யூ 11 எஸ் (iQOO 11S) போன் வெளியாகியிருக்கிறது. 200W ஃபஸ்ட் சார்ஜிங், 16GB ரேம், 1TB மெமரி, சோனி சென்சார் கேமரா என்று பின்னிப்பெடல் எடுக்கிறது.
இப்போது வரும் போன்கள் எல்லாம் லேப்டாப்களுக்கு நிகரான அம்சங்களை கொண்டிருக்கின்றன. ஏனென்றால், ஸ்மார்ட்போன் பிரியர்கள் கேமிங் முதல் வீடியோ எடிட்டிங் வரையில் போன்களிலேயே பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப் பட்டவர்களுக்காகவே பிரம்மாண்ட அம்சங்களுடன் ஐக்யூ 11 எஸ் போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐக்யூ 11 எஸ் அம்சங்கள் (iQOO 11S Specifications): இந்த போன் 6.78 அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2K ரெசொலூஷன் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது.
இதோடு ஓர்ஜின் ஓஎஸ் 3.0 (Origin OS 3.0) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 12 ஜிபி + 256 ஜிபி, 16 ஜிபி + 256 ஜிபி, 16 ஜிபி + 512 ஜிபி மற்றும் 16 ஜிபி + 1 டிபி ஆகிய 4 வேரியண்ட்களில் வருகிறது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
சோனி விசிஎஸ் ஐஎம்எக்ஸ்866 (Sony VCS IMX866 ) சென்சாருடன் கூடிய 50 எம்பி கேமரா இருக்கிறது. அதோடு 13 எம்பி போட்ராய்டு லென்ஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த போனில் முக்கிய அம்சமாக 200W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4,700mAh பேட்டரி வருகிறது.
இந்த போனை 8 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். ட்ராக் வெர்ஷன் (வைட்), கியான்டாங் டிங்சாவ் (சையன்) மற்றும் லெஜண்டரி வெர்ஷன் (பிளாக்) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 16 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.46,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் ரூ.49,000 விலைக்கும், 16 ஜிபி + 1 டிபி வேரியண்ட் ரூ.54,000 விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது, சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில், இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
கேமிங், வீடியோ எடிட்டிங் மற்றும் ரெக்கார்டிங் உள்ளிட்டவைக்கு, இந்த போன் நல்ல சாய்ஸாக இருக்கும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








