புதுசு கண்ணா புதுசு! போட்டிக்கு தயாரான iQoo.. மொத்த போனையும் ஓரங்கட்டும் iQoo 11

|

iQoo 11 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் இல் iQoo 11, iQoo 11 Pro மற்றும் iQoo 11 Legend ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. iQoo 11 குறித்த வதந்தி தகவல்கள் சமீப காலமாகவே உலா வந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அதன் முழுமையான விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு ரெண்டர்களுடன் கசிந்துள்ளன.

Vivo V2 இமேஜிங் சிப்

Vivo V2 இமேஜிங் சிப்

கசிந்த படங்களின் மூலம் iQoo 11 இல் Vivo V2 இமேஜிங் சிப் பொருத்தப்பட்டிருக்கும் என்பது தெரியவருகிறது. iQoo 11 ஸ்மார்ட்போனானது Isle of Man Edition மற்றும் Track Edition வண்ண விருப்பத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்

iQoo 11 சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவலை பார்க்கலாம். டிப்ஸ்டர் இஷான் அகர்வாலுடன் இணைந்து 91 மொபைல்ஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஐக்யூ 11 ஆனது 1,440x3,200 பிக்சல்கள் தீர்மானம், 144Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 300 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உடன் கூடிய 6.78 QHD+ E6 AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

இந்த புதிய iQoo ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 50 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8 எம்பி மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. iQoo 11 இன் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

புதிய ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OriginOS 3.0 ஸ்கின் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் சமீபத்திய ஓஎஸ் ஆகும். இந்த புதிய ஐக்யூ 11 ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் வடிவமைப்பு

ஸ்மார்ட்போன் வடிவமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் எடை 205 கிராம் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ஏறத்தாழ இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் iQoo 10 Pro போன்றே இருக்கிறது. பின்புற கேமரா மட்டும் சற்று மாற்றி அமைக்கப்பட்டது போல் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விவோ வி2 இமேஜிங் சிப் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Vivoவின் துணை பிராண்டான ஐக்யூ

Vivoவின் துணை பிராண்டான ஐக்யூ

Vivoவின் துணை பிராண்டான ஐக்யூ தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் ஐக்யூ நிறுவனம் மேம்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போன் ஆகும்.

9 வெப்பநிலை சென்சார்கள்

9 வெப்பநிலை சென்சார்கள்

ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போனானது அதிநவீன வெப்பநிலை கண்டறிதல் தொழில்நுட்பம், 9 வெப்பநிலை சென்சார்கள் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு இதில் 50 எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என பல மேம்பட்ட ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

iQOO நியோ 7 விலை

iQOO நியோ 7 விலை

iQOO நியோ 7 விலை குறித்து பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போனானது 4 வேரியண்ட்களில் அறிமுகமானது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 2699 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.30,890 ஆகும். அதேபோல் 8ஜி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 2,999 (தோராயமாக ரூ.34,400) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 3,299 (தோராயமாக ரூ.37,800) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் RMB 3,599 (தோராயமாக ரூ.41,200) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ஆரஞ்ச் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியானது.

Best Mobiles in India

English summary
iQoo 11 Might be launching with Vivo V2 imaging chip: Specs and Design Renders Leaked!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X