Just In
- 51 min ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 1 hr ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 1 hr ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 2 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- Finance
அதானி-யை புலம்பவிட்ட Hindenburg.. 88 கேள்விக்கு வரிக்கு வரி விளக்கம்..!
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- News
ஜன.,30ல் காங்கிரசுடன் இணைப்பு? மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் திடீர் ‛ஹேக்’!பரபர
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Movies
யோகி பாபு -தர்ஷா குப்தா ஜோடி சேரும் மெடிக்கல் மிராக்கிள்.. பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
எதிர்காலத்தில் போன் இப்படி தான் இருக்கும்! 200W ஃபாஸ்ட் சார்ஜிங், இ6 2கே டிஸ்ப்ளே உடன் iQoo 11, iQoo 11 Pro.!
விவோவின் துணை பிராண்டான ஐக்யூ இரண்டு ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அது iQoo 11 ப்ரோ மற்றும் iQoo 11 ஆகும். பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி
இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. iQoo 11 Pro மற்றும் iQoo 11 ஸ்மார்ட்போனானது 2கே தெளிவுத்திறன் உடன் கூடிய எல்டிபிஓ 4.o தொழில்நுட்ப சாம்சங் இ6 அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா யூனிட்கள் ஆனது வி2 சிப் உடன் பொருத்தப்பட்டிருக்கிறது. iQoo 11 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது.

iQoo 11 Pro, iQoo 11 விலை
iQoo 11 Pro இன் விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,999 (தோராயமாக ரூ.59,000) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 5,499 (தோராயமாக ரூ. 65,000) எனவும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 5,999 (தோராயமாக விலை ரூ.70,000) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

iQoo 11 விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 3,799 (தோராயமாக ரூ.44,000) எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,099 (தோராயமாக ரூ.48,000) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,399 (தோராயமாக ரூ.52,000) எனவும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,999 (தோராயமாக ரூ.59,000) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

iQoo 11 Pro சிறப்பம்சங்கள்
iQoo 11 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆர்ஜின் ஓஎஸ் 3 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் HDR10+ ஆதரவுடன் கூடிய 6.78 இன்ச் சாம்சங் அமோலெட் 2கே டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 144Hz ரேட் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த டிஸ்ப்ளே.
ஐக்யூ 11 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் சூடாவதை தவிர்ப்பதற்கு பிரத்யேக கூலிங் சிஸ்டம் ஆதரவு இருக்கிறது.

3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே
iQoo 11 Pro ஆனது 50 எம்பி CS IMX866 முதன்மை சென்சார், அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 50 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 13 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கிறது. விவோவின் வி2 இமேஜ் சிக்னல் பிராசஸர் சிப் இதில் இடம்பெற்றுள்ளது. 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இதில் இடம்பெற்றிருக்கிறது.

200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
iQoo 11 Pro ஸ்மார்ட்போனில் 200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது. 4700 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

iQoo 11 சிறப்பம்சங்கள்
iQoo 11 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் பெரும்பாலான அம்சங்கள் ஐக்யூ 11 ப்ரோ போன்றே இருக்கிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா, 13 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470