Home
Mobile

Android வம்சமே பார்த்திடாத ஹை-ஸ்கொர்.! iQOO 11 ஐ பார்த்து அலறி ஓடிய மற்ற போன்கள்.!

ஸ்மார்ட்போன் சந்தைக்குள் ஒரு புதிய ஸ்மார்ட் போன் களமிறங்கும் பொழுது அதனுடைய தரத்தை நாம் எப்போதும் சில மதிப்பீடுகளை வைத்தே மதிப்பிடுகிறோம். இப்படி மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின் பொழுது பலதரப்பட்ட டெஸ்ட்டிங்களை நாம் மேற்கொள்வது வழக்கம்.

ஒரு ஸ்மார்ட்போனின் தரத்தை பெரும்பாலும் விவரம் தெரிந்த மக்கள் AnTuTu ஸ்கோரிங்கை வைத்துத் தான் மதிப்பீடு செய்து அது தரமானதா இல்லையா என்பதைத் தரம் பிரிக்கிறார்கள். அப்படி, சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தான் iQOO 11 சாதனம். இந்த ஸ்மார்ட் போனின் சமீபத்திய டெஸ்டிங் ஸ்கோர் ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. காரணம், இதுவரை இருந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே இப்படி ஒரு உயர் மதிப்பெண்ணை எந்தவொரு ஸ்மார்ட்போனும் எடுத்ததில்லை என்பதை உண்மையாகும்.

Android வம்சமே பார்த்திடாத ஹை-ஸ்கொர்.! iQOO 11 பார்த்து ஓடிய போன்கள்.!

உண்மையிலேயே இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஸ்கோரிங் மதிப்பீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேட்டிங் ஸ்கேலை தாண்டியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் ஜனவரி 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குவால்கம் ஸ்னாப் டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட்டுடன் அறிமுகமாகும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் சேர்த்து iQOO 11 Pro ஸ்மார்ட்போன் சாதனத்தையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதில் வெளியான தகவலின்படி iQOO 11 இதுவரை இல்லாத AnTuTu மதிப்பெண்ணை பெற்றுள்ளது. நம்ப முடியாத விதத்தில் 13,23,820 என்ற AnTuTu மதிப்பெண்களை இந்த iQOO 11 சாதனம் பெற்றுள்ளது.

Android வம்சமே பார்த்திடாத ஹை-ஸ்கொர்.! iQOO 11 பார்த்து ஓடிய போன்கள்.!

இந்த மதிப்பெண்ணை இதுவரை ஆண்ட்ராய்டு வரலாற்றில் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோனும் எடுத்ததில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண் போக, iQOO 11 அதன் சிபியு டெஸ்டிங் இல் 2,70,987 என்ற மதிப்பெண்ணையும், அதேபோல் நம்ப முடியாத வகையில் 6,07,822 என்ற ஜிபியு மதிப்பெண்களையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஸ்டோரேஜ் மற்றும் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மதிப்பீட்டின் போது இந்த சாதனம் முறையே 2,44,782 மற்றும் 2,00,229 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளது.

தெரியாதவர்களுக்கு இந்த புதிய iQOO 11 ஸ்மார்ட்போன் UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் LPDDR5 RAM உடன் வருகிறது. இந்த iQOO 11 சாதனம் Asus ROG Phone 6, Asus ROG Phone 6 Pro, Xiaomi 12T Pro போன்ற ஸ்மர்ட்போனின் மதிப்பெண்களை தரைமட்டம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்படி மதிப்பெண்களை வாரிக் குவித்த இந்த iQOO 11 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாமா?

Android வம்சமே பார்த்திடாத ஹை-ஸ்கொர்.! iQOO 11 பார்த்து ஓடிய போன்கள்.!

iQOO 11 சிறப்பம்சம் மற்றும் முழு ஸ்பெக்ஸ் விபரங்கள்

  • 6.78' இன்ச் AMOLED LTPO 4.0 (3200 x 1440 பிக்சல்) டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC
  • 16 GB ரேம் மற்றும் 512 GB ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 OS
  • 50 MP + 13 MP + 8 MP டிரிபிள் ரியர் கேமரா
  • 16 MP செல்ஃபி ஷூட்டர்
  • 5,000mAh பேட்டரி
  • 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 5G,
  • டூயல் 4G VoLTE
  • Wi-Fi 6 802.11
  • ப்ளூடூத் 5.3
  • ஜிபிஎஸ் / க்ளோனஸ் (GLONASS)
  • யுஎஸ்பி டைப்-C
  • NFC
  • இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • IR சென்சார்
  • ஹை-ஃபை ஆடியோ
  • ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்று ஏராளமான அம்சங்களை இந்த iQOO 11 போன் கொண்டுள்ளது. இந்த டிவைஸ் பெற்ற உயர் மதிப்பெண்களைப் பார்த்து மற்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அலறிக் கொண்டு பேக் அடித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
Best Mobiles in India

English summary
iQOO 11 Gets Highest AnTuTu Score Ever Recorded By Any Android smartphone Till Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X