Home
Mobile

பணபரிவர்த்தனை செய்யும் வசதியுடன் ஆப்பிள் ஐபோன்-5!

By Super

பணபரிவர்த்தனை செய்யும் வசதியுடன் ஆப்பிள் ஐபோன்-5!
கடந்த ஆண்டில் மகத்தான வெற்றியை பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகளின் மேல் வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போனுக்கு அடுத்து, ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் வர இருக்கும் புதிய தொழில் நுட்பம் பற்றி மக்களிடையே அதிக எதிர் பார்ப்பு இருக்கிறது.

இந்த ஐபோன்-5 பற்றிய தகவல்களை வெளியிடாமல், ஆப்பிள் நிறுவனம் படு ரகசியம் காத்து வருகிறது. ஆனாலும் அவ்வப்போது சில தகவல்கள் கசிகிறது. என்எப்சி தொழில் நுட்பத்தினை ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் வழங்க உள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இதன் மூலம் மொபைலில் இருந்தே பண பரிவர்த்தனைகளை செய்யலாம். அதிக அளவு பணபரிவர்த்தனைகளை செய்ய விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் சப்போர்ட் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது பற்றி அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 5 மெகா பிகஸ்ல் கேமராவை வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான ஐபோன்-4எஸ் ஸ்மார்ட்போன் சிரி என்ற புதிய அப்ளிக்கேஷன் மூலம் புதிய புதுமையையே ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று ஐபோன்-5 ஸ்மார்ட்போனும் தொழில் நுட்ப உலகில் புதுமைகளை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் அதிக தகவல்களை எதிர் நோக்கி காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X