மீண்டும் சிக்கலில் சிக்கிய ஐபோன் 12: இந்த முறை பேட்டரி.!

|

கடந்த அக்டோபர் மாதம் ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தன. குறிப்பாக இதில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரக ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றன.

ஐபோனின் நம்பகத்தன்மை மக்களிடம்

குறிப்பாக ஐபோனின் நம்பகத்தன்மை மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நிலையில், இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆரம்பம் முதல்
பயனர்களிடம் தொடர்ந்து புகார்களை சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது மீண்டும் இந்த ஐபோன் 12 சீரிஸ் போன்களின் பேட்டரி சார்ஜ் வேகமாக காலியாவதாக பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வைக்கும்

மேலும் இதுகுறித்து வாடிக்கையாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னவென்றால், இந்த ஐபோன் 12 சாதனத்தை பயன்படுத்தி சிறுது நேரத்திலேயே பேட்டரியில் உள்ள சார்ஜ் இறங்கி விடுகிறது என்று தெரவித்துள்ளனர்.

வீடியோ HD ஸ்ட்ரீமிங் செய்தால் பூமிக்கும் உங்களுக்கும் ஏற்படும் ஆபத்து.. விஞ்ஞானிகள் கூறும் உண்மை இதுதான்..வீடியோ HD ஸ்ட்ரீமிங் செய்தால் பூமிக்கும் உங்களுக்கும் ஏற்படும் ஆபத்து.. விஞ்ஞானிகள் கூறும் உண்மை இதுதான்..

 லோயர் பவர் மோடை

பின்பு போனில் இருக்கும் லோயர் பவர் மோடை பயன்படுத்தி போனை பயன்படுத்தலாம் என்று நினைத்தால், பேட்டரியின் பயன்பாடு இன்னும் மோசமாக இருக்கிறதாக சொல்லப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களை வாங்கிய

குறிப்பாக இந்த ரக ஸ்மார்ட்போன்களை வாங்கிய 1000 வாடிக்கையாளர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் ஆஃப் செய்யப்பட்டு, வேறு எந்த செயல்பாடுகள் செய்யாமல் இருந்தாலும் கூட, ஒரே இரவில் பேட்டரியின் சார்ஜ் 20 முதல் 40 சதவீதம் இறங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வாடிக்கையாளர்களின் இந்த புலம்பல்

ஆனால் வாடிக்கையாளர்களின் இந்த புலம்பல் குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை வாய்திறக்கவில்லை. அதேசமயம் இது ஐஒஎஸ்-ன் குறைபாடாக இருக்கலாம் என்று, ஐஒஎஸ் 14 அப்டேட்டின் போது இந்த குறைபாடு சரிசெய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஐபோன் 12 சாதனங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேக்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் தீர்மானமும் ஓஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே ஆகும். இந்த மாடலானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இது ஐஓஎஸ் 14 மூலம் இயக்கப்படுகிறது. இதில் டூயல் சிம் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டுக்காக ஐபி68 வசதி உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் பொருத்தப்பட்டுள்ளது.

மூன்று கேமரா வசதி

இதன் பின்புறத்தில் மூன்று கேமரா வசதி இருக்கிறது. 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா 5P லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2 கொண்டுள்ளது. இதில் லிடார் ஸ்கேனர் வசதி இருக்கிறது. மேலும் இதில் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா அம்சம் இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ தொடர் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பி விஷன் எச்டிஆர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில் ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. இதில் 5 ஜி ஆதரவு 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5 அம்சம் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Iphone12 Users Now Facing Another Issues: Do you Know What?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X