தற்போது வெளியான ஐபோன்கள் செய்யும் மேஜிக் என்ன? இதுதான் சமாச்சாரமான வீடியோஸ்.!

இந்த மூன்று மாடல்களிலும் என்ன தான் இருக்கின்றது என்று ஏராளமானோர் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபோன் நிறுவனம் இந்த போன்களின் சிறப்பான குறித்து வீடியோ வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியாகி இருக்கும் போன

|

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட் போன்களை நேற்று அமெரிக்காவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் அறிமுகம் செய்தது. தற்போது எக்ஸ் எஸ் (xs), எக்ஸ் மேஸ் (xs max) , எக்ஸ்ஆர் (xr) என்ற மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மூன்று மாடல்களிலும் என்ன தான் இருக்கின்றது என்று ஏராளமானோர் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபோன் நிறுவனம் இந்த போன்களின் சிறப்பான குறித்து வீடியோ வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியாகி இருக்கும் போன்களில் புதிய அம்சங்கள் என்ன ஒளிந்துள்ளது என்று ஐ போன் நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.

இதில் ஐபோன்கள் பல்வேறு தொழில் நுட்ப வசதிகளுடன் வெளியாகியுள்ளது. இரு மேஜிக் மேனை போல இந்த ஐபோன்கள் செய்து நமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபோன்கள் விலை :

ஐபோன்கள் விலை :

புதிய ஐபோன்களான எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ் மேக்ஸ் ஆகிய போன்களில் மட்டும் டூயல் சிம்கள் இருக்கும். இந்த ஐபோன்கள் நிறங்களில் எக்ஸ்எஸ் , எக்ஸ் எஸ் மேக்ஸ் ஸ்மார்ட் போன்கள் கோல்டு சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே கிடைக்கும். இந்தியாவில் எக்ஸ் எஸ் மாடல் ரூ.71, 813 முதல் ரூ.79,001 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிகின்றது.

எக்ஸ் எஸ் மேஸ் விலை ரூ. 99,990 மற்றும் ரூ.1,09,990க்கும் விற்கப்படும் என்று தெரிகின்றது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் ஐயின் விலை ரூ. 53,860 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐ போன் செய்யும் மேஜிக்:

ஐபோன் எக்ஸ் எஸ், எக்ஸ் எஸ் ஆர் மாடல் ஐபோன்கள் 5.8 இன்ச் , 6.4 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்பிளேவுடன் வந்துள்ளன. இந்த போனில் பல்வேறு தொழில் நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் உள்ள பொருத்தியுள்ள கேமராக்கள் மூலம் பல்வேறு காட்சிகளையும் தெளிவாக எடுக்க வீடியோவும், புகைப்படமும் எடுக்க முடியும்.

காட்சிகளை பல்வேறு கோணங்களில் நிறுத்தி பார்த்துக் கொள்ளலாம். மேலும் அதை ஓரே திரையில் காட்சி படுத்தவும் முடியும். இதை பிறருக்கும் அனுப்பி மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமிங்கில் புதிய பரிமாணம்:

6-கோர் சிபியு கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்த்தியை பயன்படுத்தி அதிக செயல்திறன் கொண்ட சிப்செட் பொறுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களில் இருப்பதால், கூடுதல் கேம்களை நீண்ட நேரம் விளையாட முடியும்.

மேலும் அதே வேளையில், இந்த கேம் விளையாடும் போதும் மொபைல்கள் கேங் ஆகிவிடும். ஆனால் இந்த போன்களில் அதுமாதிரி ஆகாது. மேலும் புதிய பரிமாணத்துடன் விளையாட முடியும். நேரில் விளையாடுவது போல் உணர்வு பூர்வமாக இருக்கும்.

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

ஐபோன் எக்ஸ்.எஸ் : 5.8 இன்ச் 2436x1125 பிக்சல், ஓஎல்இடி 458 ppi சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே உடன் கூடிய 3D டச் திரையும் உள்ளது.

ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்:
6.5 இன்ச் 2688x1245 பிக்சல் ஓஎல்இடி 458ppi சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே, 3D டச் திரை - 6கோர், ஏ12 பயோனிக் 64பிட் 7 என்எம் பிராசஸர் 4கோர் ஜிபியு, எம்12 மோஷன் கோ பிராசஸர் - 64 ஜிபி / 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட் - iOS 12 - IP68 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் - டூயல் சிம் - 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா -

டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உடன் கூடிய 12 மெகா பிக்சல் டெலி போட்டோ கேமரா - ரெட்டினா ஃபிளாஷ் 7 எம்பி செல்ஃபி கேமரா - 4ஜி வோல்ட்இ, - வைப்பை - ப்ளூடூத் - ஜி.பி.எஸ் - க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் - ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அசம்ங்கள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
iPhone XS release date price and specs iPhone XS XS Max pre orders go live : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X