பட்ஜெட் விலையில் 'மினி' ஐபோன் எக்ஸ்.? ஆப்பிள் ரசிகர்கள் குஷி.!
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் மூன்று மாதிரிகளில் - 5.8 அங்குல ஓஎல்இடி மாறுபாடு தான் மிகவும் மலிவான விலை நிர்ணயம் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டை போலவும், இந்த ஆண்டின் (2018) இலையுதிர் காலத்திலும் ஆப்பிள் அதன் புதிய ஐபோன் மாதிரிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முன்னர் வெளியான அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்த 2018 ஆம் ஆண்டில் மொத்தம் ஆண்டு மூன்று ஐபோன் மாறுபாடுகளை அறிவிக்கும். அதாவது - 6.5 அங்குல ஓல்இடி மாடல், 6.1 அங்குல எல்சிடி மாடல் மற்றும் ஒரு 5.8-அங்குல ஓல்இடி மாடல்.
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் மூன்று மாதிரிகளில் - 5.8 அங்குல ஓஎல்இடி மாறுபாடு தான் மிகவும் மலிவான விலை நிர்ணயம் கொண்டிருக்கும்.

999 டாலர்கள் என்கிற விலையை தகர்க்கும்.!
அதாவது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு "மினி ஐபோன் எக்ஸ்" ஆக வெளியாகப்போகும் இக்கருவியானது, மிகப்பெரிய எதிர்ப்புகளை சந்தித்த 999 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைப்புள்ளியை முற்றிலுமாக தகர்க்குமென்று அர்த்தம்.

மலிவு விலைக்கான காரணம் என்ன.?
டிஜிடைம்ஸ் ஆய்வாளர் ஆன லூக் லின்னின் கருத்துப்படி, புதிய 5.8 அங்குல ஐபோன் மாடலானது ஐபோன் எக்ஸ்-ஐ விட 10 சதவிகிதம் குறைவான டோட்டல் பில் ஆப் மெடீரியல்ஸ் (MBOM) கொண்டுள்ள மாதிரியாக இருக்கும். இதன் காரணமாக, கூறப்படும் புதிய 5.85 அங்குல ஆப்பிள் சாதனமானது கடந்த மூன்று தலைமுறை ஐபோன் மாடல்களில் காணப்படாத அளவிலான மலிவு விலை நிர்ணயம் பெறலாம்.

கடந்த பிப்ரவரி நடுப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டது.!
ஆரம்பத்தில் எல்சிடி சாதனமாக திட்டமிடப்பட்ட இந்த 5.85 அங்குல ஐபோன் ஆனது கடந்த பிப்ரவரி நடுப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டதும், பின்னர் ஓஎல்இடிடிஸ்பிலேவை எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


எல்பிடிஆர்டி சேமிப்பில் மிகப்பெரிய வேறுபாடு.!
டிஜிடைம்ஸ் ஆய்வாளர் ஆன லூக் லின்னும், வெளியாகப்போகும் மூன்று புதிய ஐபோன் மாடல்களில் இந்த 5.85 அங்குல ஓஎல்டி ஐபோன் ஆனது மலிவான விலை நிர்ணயம் கொண்டிருக்கும் என்பதை நம்புகிறார். உடன் இக்கருவி 6.1 அங்குல எல்சிடி ஐபோனை விட குறைவான அம்சங்களை கொண்டிருக்குமென்பது - அதாவது எல்பிடிஆர்டி சேமிப்பில் மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டிருக்கலாம் என்பது - வெளிப்படை.


Click it and Unblock the Notifications