ஐபோன்-5... ஆப்பிளின் அடுத்த அஸ்திரம்!

By Super
|

ஐபோன்-5... ஆப்பிளின் அடுத்த அஸ்திரம்!
2011 ஆண்டு ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டு சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெயரை வாடிக்கையாளர்களிடம் இருந்து தட்டி சென்றது ஆப்பிள். ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர் பார்க்கின்றனர்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் முன்னதாகவே வெளியிட இருந்த ஆப்பிள் நிறுவனம் ஏனோ, அதற்கு பதிலாக ஆப்பிள் ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அன்றிலிருந்து வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வெளியாகும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சிறந்த தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எல்டிஇ தொழில் நுட்பத்தையும், கியூவல்காம் சிப் வசதியையும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என்ற ஒரு முக்கிய தகவலும் கசிந்துள்ளது.

3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தையும் இந்த ஐபோன் வழங்கும். இப்படி பல கருத்துக்கள் இந்த ஆப்பிள் ஐபோன்-5 பற்றி வெளியாகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த பெயர் எடுப்பதை விட அதை தக்க வைத்து கொள்வதற்காக அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருப்பது உண்மை தான். இதுவரை பெற்ற சிறப்பான பெயரை தக்க வைத்து கொள்ள ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் இன்னும் உயர்ந்த தொழில் நுட்பங்கள் சேர்க்கப்படும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. இதை பற்றிய தகவல்களை காத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X