Apple-ன் 5.3-இன்ச் iPhone.. 12GB ரேம், இரண்டு 48MP கேமரா.. Samsung, VIVO வயிற்றில் புளியை கரைக்கும் அப்டேட்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஐபோன் (Foldable iPhone) ஆனது இந்த 2026 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) அல்லது ஐபோன் ஃபோல்ட் (iPhone Fold) என்று அழைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ஐபோன் மாடலின் அறிமுகம் அல்லது வருகை குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ள ஐபோன் அல்ட்ராவின் டம்மி மாடல் (dummy model) ஆனது, இந்த போல்டபிள் ஐபோனின் வடிவமைப்பு குறித்த ஒரு தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது.

'திரெட்ஸ்' (Threads) தளம் வழியாக பத்திரிகையாளர் ஜான் ரெட்டிங்கர் (Jon Rettinger), ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் மாதிரி வடிவங்களின் படங்களை பதிவிட்டுள்ளார். அந்த படங்களில் உள்ள வடிவமைப்புகள் ஆனது தற்போதுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் பாணியிலிருந்து ஆப்பிளின் போல்ட் மாடல் மாறுபட்டிருப்பதை உணர்த்துகின்றன.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மற்றும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 (Vivo X Fold 5) போன்ற போன்களில் காணப்படும் உயரமான மற்றும் குறுகலான வெளிப்புற ஸ்க்ரீனுக்கு பதிலாக, ஐபோன் அல்ட்ரா மாடல் ஆனது அகலமான வெளிப்புற ஸ்க்ரீனை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மடிக்கப்பட்ட நிலையில், இது பார்ப்பதற்கு ஒரு பாஸ்போர்ட் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது.
அகலமான வெளிப்புற ஸ்க்ரீன் இருப்பதால், பயனர்கள் போனை விரிக்காமலேயே பல பணிகளை செய்ய முடியும். விரிக்கப்பட்ட நிலையில், இதன் உட்புற ஸ்க்ரீன் ஆனது ஐபேட் மினி (iPad mini) போன்ற தோற்றத்தை அளிக்கிறது. டேப்லெட் போன்ற இந்த ஸ்க்ரீன், ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதற்கும் (multitasking), ஸ்க்ரீனை பிரித்து வெவ்வேறு ஆப்களை பயன்படுத்துவதற்கும் (split-screen apps) பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாதிரி வடிவங்கள் ஐபோன் அல்ட்ராவை வெள்ளை நிறத்தில் காட்டுகின்றன. விரிக்கப்பட்ட நிலையில், ஸ்க்ரீனின் மேல் இடது மூலையில் செல்பீ கேமரா உள்ளது; பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் கிடைமட்டமாக (horizontal) அமைந்துள்ளன. பின்புற கேமரா அமைப்பில் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் மைக்ரோஃபோன் ஆகியவை உள்ளன. இதன் அடிப்பகுதியில் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் அமைந்துள்ளது.
ஆப்பிளின் போல்டபிள் ஐபோனுக்கான மாதிரி வடிவங்கள் இண்டர்நெட்டில் லீக் ஆவது இது முதல் முறையல்ல. இதே முன்மாதிரியின் (prototype) படங்கள் கடந்த வாரமும் வெளியாகி இருந்தன. இது செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) சீரீஸ் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் அல்ட்ராவில் 7.8 இன்ச் இன்னர் ஸ்க்ரீனும், 5.3 இன்ச் எக்ஸ்டர்னல் ஸ்க்ரீனும் இருக்கும் என்று முந்தைய கசிவுகள் தெரிவிக்கின்றன.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் அல்ட்ராவில் ஆப்பிளின் ஏ20 ப்ரோ (A20 Pro) சிப்செட் இடம்பெறலாம். இதில் 12ஜிபி LPDDR5x ரேம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியர் கேமரா அமைப்பில் இரண்டு 48-மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், இதில் ஆப்பிளின் சொந்த தயாரிப்பான சி2 மோடம் (C2 modem) இடம்பெறக்கூடும்.Photo Courtesy: www.gadgetpilipinas.net


Click it and Unblock the Notifications