Home
Mobile

ஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ. 26,990 மட்டுமே.!

ஐபோன் என்றாலே நம் மனதில் தோன்றும் முதல் எண்ணம், இந்த போன்கள் விலை உயர்ந்த போன்கள் என்பதுதான். இந்த எண்ணத்தை மாற்றுவதற்காக ஐபோன் நிறுவனம் தற்போது புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ.26990 மட்டுமே

விலை உயர்ந்த ஐபோன் மாடல்களை வாங்க சில பயனர்கள் மட்டுமே தயாராக உள்ள நிலையில், மிகக் குறைந்த விலையில் ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் விலை போன்கள் பிரிவில் ஆப்பிள் நிறுவனம் கால் பதிக்கத் தயாராகிவிட்டது.

இதன்படி ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் SE2 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்யத் தயாராகிவருகிறது. இந்த புதிய ஐபோன் பற்றிய துல்லியமான தகவல்களை ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வாளரான 'மின் சி குவா' தற்போது வெளியிட்டுள்ளார்.

ஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ.26990 மட்டுமே

இந்த புதிய ஐபோன் SE2 மாடல் எப்போது வெளியாகும் என்றும், இதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்ற தகவல்களை தற்போது மின் சி குவா வெளியிட்டுள்ளார். குறிப்பாக இந்த ஐபோன் கம்மியான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆப்பிள் SE2 ஐபோன் முந்தைய மாடலான ஐபோன் 8 வடிவமைப்பை போன்று 4.7 இன்ச் அளவிலான எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதில் மிகவும் சக்தி வாய்ந்த மேம்பட்ட A13 சிப்செட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ.26990 மட்டுமே

இந்த புதிய ஐபோன் மாடல் அடுத்த ஆண்டின், முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE2 இந்தியாவில் வெறும் ரூ. 26,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone SE2 Will Be Launched Soon In The Price Of Rs.26,990 Only : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X