Home
Mobile

ரூ.5000/- கேஷ்பேக் ஆபருடன் அதிரடி விலைக்குறைப்பில் ஐபோன் எஸ்இ.!

விலைக்குறைப்பு உடன் ரூ.5,000/- கேஷ்பேக் சலுகை : எந்தெந்த கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு.? (முழு விவரங்கள்)

By Muthuraj

ஐபோன் என்பது நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஒரு கனவு கருவியாகும். அந்த கனவை சாத்தியப்படுத்திக்கொள்ள விடாமல் நந்தி போல குறுக்கே நிற்பது அதன் விலை நிர்ணயம் மட்டும் தான்.

ரூ.5000/- கேஷ்பேக் ஆபருடன் அதிரடி விலைக்குறைப்பில் ஐபோன் எஸ்இ.!

அப்படியான ஐபோன் கருவிகள் மீது விலைக்குறைப்பு அல்லது சலுகைகள் வந்தால் அதை உடனே பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் (அதே சமயம், அதிகாரப்பூர்வமாக இல்லாது, நம்பவே முடியாத வண்ணம் மிகவும் குறைவான விலையில் ஐபோன்கள் விற்பனைக்கு வந்தால் அவைகள் 90% போலியான கருவிகளை இருக்கலாம் என்பதையும் வாசகர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதிகாரப்பூர்வமான சலுகைகளை தமிழ் கிஸ்பாட் தளத்தில்கண்டறிந்து கொள்ளவும்)

அப்படியான ஒரு அதிகாரப்பூர்வமான அதிரடி சலுகையானது ஐபோன் எஸ்இ கருவி மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகையில் கீழ் தான் ரூ.19,999/-க்கு உங்களால் ஐபோனை சொந்தமாக்கிட முடியும். அதெப்படி.?

மாறுபாடு

மாறுபாடு

ஐபோன் எஸ்இ கருவியின் 16ஜிபி மாறுபாடு மற்றும் 64ஜிபி மாறுபாடு ஆகிய இரண்டு கருவிகளும் இந்தியாவில் முறையே ரூ.19,999/- மற்றும் ரூ.25,999/-க்கு ஆப்பிள் வழியாக அங்கீகாரம் பெற்ற ஆஃப்லைன் விற்பனையாளர்கள் மூலமாக இந்தியாவில் கிடைக்கிறது.

கேஷ்பேக்

கேஷ்பேக்

மேலும் இந்த ஐபோன் எஸ்இ சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக இருக்கும். கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஐபோன் எஸ்இ கருவி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000/- கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

உண்மையான விலை

உண்மையான விலை

ஐபோன் எஸ்இ கருவியின் 16ஜிபி மாறுபாடு மற்றும் 64ஜிபி மாறுபாடு ஆகிய கருவிகளின் உண்மையான விலை முறையே ரூ.39,000/- மற்றும் ரூ.44,000/- என்பதும், இதுநாள் வரை எந்த அதிகாரப்பூர்வ விலைக்குறைப்பையும் ஆப்பிள் இந்தியா அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சமீபத்திய வாய்ப்பானது நிதி ஆண்டின் முடிவின் ஒரு உந்துதல் பகுதியாக இருக்கலாம்.!

விலைக்குறைப்பு

விலைக்குறைப்பு

அப்படியாக 16ஜிபி ஐபோன் எஸ்இ கருவியின் விலை ரூ. 27,000 மற்றும் ரூ.29,000/- ஆகியவைகளுக்கு இடையே விலை நிர்ணயம் பெற இப்போது சில்லறை விற்பனையாளர்கள், விலைக்குறைப்பு நிகழ்த்தி ரூ.24,999/ என்றாக்கி அதில் ரூ.5,000/- கேஷ்பேக் சலுகை வழங்கி ரூ.19,999/- என்ற விலையில் வாங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

எந்தெந்த கிரெடிட் கார்டுகளுக்கு.?

எந்தெந்த கிரெடிட் கார்டுகளுக்கு.?

இந்த ஐபோன் எஸ்இ சலுகை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பெற்றுள்ளது. மேலும் ஆவணங்களின் படி மார்ச் 31 வரை இந்த சலுகை பின்வரும் வழங்கப்பட்ட கிரெடிட் அட்டைகளுக்கு கிடைக்கும் : ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, எச்எஸ்பிசி, ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, கோடக், ஆர்பிஎல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி.

எந்தெந்த  டெபிட் கார்டுகளுக்கு.?

எந்தெந்த டெபிட் கார்டுகளுக்கு.?

டெபிட் அட்டைகளை பொறுத்தம்மட்டில் : ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, எச்எஸ்பிசி, ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, கோடக், ஆர்பிஎல் வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் யெஸ் வங்கி.

இஎம்ஐ மூலம்.?

இஎம்ஐ மூலம்.?

இந்த ஐபோன் எஸ்இ சலுகையானது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வாடிக்கையாளர்களுக்கு அல்ல என்பதும், கேஷ்பேக் ஆனது 90 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைக்கும் என்பதும், நீங்கள் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி இஎம்ஐ மூலம் ஐபோன் எஸ்இ வாங்க விரும்பினால் அது முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்ப 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்பு ஏன்?

Best Mobiles in India

English summary
iPhone SE in India at Rs. 19,999: What You Need to Know. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X