அடுத்த வாரம் ஆட்டம்தான்.. iPhone SE 4 வெயிட்டிங் முடிய போகுது.. இனிமே Apple யூசர்களை கையில புடிக்க முடியாது!
ஆப்பிள் பிரியர்கள் இந்த ஒரு செய்திக்காக மரண வெயிட்டிங் மோடில் காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்படி ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) போனின் வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஐபோன் 14 போன்ற டிசைன் மட்டுமல்லாமல், ஏ18 பயோனிக் சிப்செட், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ், டைப் சி போர்ட் போன்றவற்றுடன் அப்கிரேட் செய்யப்பட்டு களமிறங்க இருப்பதாவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஐபோன் எஸ்இ 4 போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் எஸ்இ சிரீஸ் போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால், அடுத்தடுத்து பிரீமியம் மாடல்கள் களமிங்கியதால், இந்த போன்கள் பெரிதும் பேசப்படவில்லை. ஆனால், ஐபோன் எஸ் 4 மடலானது, இந்த ஜெனரேஷனுக்கு ஏற்ப கேமரா, டிசைன், சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் அப்கிரேட் செய்யப்பட்டு வர இருப்பதாக தகவல் வெளியானது.

அப்போதில் இருந்து இந்த ஐபோன் எஸ் 4 எப்போது வெளியாகும் என்று ஆப்பிள் பிரியர்கள் வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். ஏனென்றால், இந்த போன் மலிவான விலைக்கு கிடைக்கும். அதே நேரத்தில் பீச்சர்களும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கும். இதனாலேயே அதன் மீது தனி கவனம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், இப்போது அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் (Mark Gurman) இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், டிசைனில் ஐபோன் 14 போல டிசைன் இருக்கும். ஏ18 சிப்செட் மற்றும் யுஎஸ்பி-சி (USB-C) போர்ட் கிடைக்கும். டிஸ்பிளேவும் பெரியதாக இருக்கும் என்று மார்க் குர்மன் தெரிவித்து இருக்கிறார்.
ஆகவே, அடுத்த வாரம் ஆப்பிள் பிரியர்களுக்கு கொண்ட்டாட்டமான வாரமாக இருக்கப் போகிறது. இந்த ஐபோன் எஸ்இ 4 போனின் வெளியீடு பிரம்மாண்டமாக இருக்காது. செய்தி வெளியீடு மூலம் ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்போது, ஐபோன் எஸ்இ 4 போனின் எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்வோம்.
ஐபோன் எஸ்இ 4 அம்சங்கள் (iPhone SE 4 Specifications): இந்த ஐபோனில் 6.1 இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. ஐபோன் 14 மாடலை போலவே சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாக இது இருக்கப்போகிறது. 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) பீச்சர் வருகிறது.

அதேபோல ஹோம் பட்டன், டச் ஐடிக்கு பதிலாக பேஸ்அன்லாக் வருகிறது. ஏ18 (A18) சிப்செட் வருகிறது. செக்யூரிட்டி சிப் இடம்பெறுகிறது. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) கிடைக்கிறது. மேலும், டைப்-சி (Type-C) போர்ட கிடைக்கிறது. ஐபோன் 14 போன்ற டிசைனில் வர இருப்பதால், சைடு பட்டன் மற்றும் பாக்ஸி ஃபிரேம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ஐபோன் எஸ்இ 4 போனின் விலை 499 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்திய மதிப்பில் ரூ.43,651ஆக இருக்க வாய்ப்புள்ளது. அல்லது மலிவான விலைக்கும் வெளியாகலாம். ஏனென்றால், இது மலிவு விலைக்கே அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
(Image Credit: @appltrack)


Click it and Unblock the Notifications








