Home
Mobile

மறுபடியுமா.. iPhone SE 4 கொஞ்சம் லேட்.. ஆனால், Apple யூசர்களுக்கு டபுள் ட்ரீட்.. மேக்புக் Air M4 ரெடியாச்சு!

ஒட்டுமொத்த ஆப்பிள் பிரியர்களும் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்த்த ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) போனானது அடுத்த வாரத்துக்கு தள்ளிப் போய்விட்டது. ஆனால், ஆப்பிள் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்-தான் என்பது போல மேக்புக் ஏர் எம்4 வெளியீடும் அடுத்தடுத்த வாரங்களில் இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்பு குறையாமல் இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் மலிவு விலை மாடலாக ஐபோன் எஸ்இ 4 இருக்கும் என்பதால், அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. மேலும், இது எஸ்இ சீரிஸ்களில் அப்கிரேட் செய்யப்பட்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence), டைப்-சி (Type-C) போர்ட், ஏ18 (A18) சிப்செட் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மறுபடியுமா.. iPhone SE 4 கொஞ்சம் லேட்.. Apple யூசர்களுக்கு ட்ரீட்!

இதனால், ஆப்பிள் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களும் இதன் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் (Mark Gurman) இந்த வாரம் ஐபோன் எஸ்இ 4 வெளியாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் சற்று எதிர்பார்ப்பு குறைந்தது.

ஆனால், இப்போது டபுள் ட்ரீட் கொடுப்பது போல ஐபோன் எஸ்இ 4 அடுத்த வாரம் வெளியாக இருப்பதாகவும், ஆப்பிள் எம்4 மேக்புக் ஏர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக இருப்பதாகவும் மார்க் குர்மன் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார். அதேபோல ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) செய்தி வெளியீடும் வரும் வாரங்களில் இருக்கும்.

என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆப்பிள் பிரியர்கள் குஷியாகிவிட்டனர். ஆப்பிள் எம்4 மேக்புக் ஏர் அல்லது ஆப்பிள் விஷன் ப்ரோ ஆகிய மாடல்களானது அல்ட்ரா பிரீமியம் விலைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஐபோன் எஸ்இ 4 அப்படியில்லை. சற்று மலிவான விலைக்கு வெளியாக இருக்கிறது. ஆகவே, அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஐபோன் எஸ்இ 4 அம்சங்கள் (iPhone SE 4 Specifications): இந்த எஸ்இ மாடலானது, டிஸ்பிளே, டிசைன் மற்றும் சிப்செட் பீச்சர்களில் அப்கிரேட் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) பீச்சர் கிடைக்க இருக்கிறது. டிசைனில் டைப்-சி (Type-C) போர்ட் வர இருக்கிறது. அதேபோல ஏ18 (A18) சிப்செட் கிடைக்க இருக்கிறது.

இதுபோக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) சப்போர்ட் கொண்ட மாடலாக ஐபோன் எஸ்இ 4 இருக்கப் போகிறது. காம்பாக்ட் மாடலாக இருப்பதால், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.1 இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ட்ரூ டோன் வரலாம்.

48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் பேஸ் ஐடி வர இருக்கிறது. டைப்-சி போர்ட் மட்டுமல்லாமல் 3279mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆகவே, பேக்கப் கொஞ்சம் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் இதில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே.

இந்த ஐபோன் எஸ்இ 4 போனின் விலை 499 அமெரிக்க டாலர்கள் முதல் 599 அமெரிக்க டாலர்கள் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.43,313 முதல் ரூ,51,993 வரையில் விலை இருக்க வாய்ப்புள்ளது. இது ஆப்பிளின் பழைய மாடல்களின் விலையிலேயே இருக்கிறது. ஆனால், அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்கிறது.

(Image Credit: @appltrack)

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone SE 4 To Be Launch Next Week Apple MacBook Air M4 Launch Expected To Launch Coming Weeks
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X