ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!

|

ஆபர் விலையில் ஐபோன் 12 அல்லது ஐபோன் 13 வாங்க கிடைக்கிறதா? என்று தேடிக்கொண்டு இருக்கும் அனைவரும்.. அந்தந்த தேடல்களை அப்படியே 'ஸ்டாப்' செய்யவும்!

ஏனென்றால், 6.1-இன்ச் அளவிலான ஒரு புதிய iPhone அறிமுகமாக தயார் நிலையில் உள்ளது. அதுவும் ரூ.30,000 என்கிற பட்ஜெட் விலையில்!

என்ன மாடல்?

என்ன மாடல்?

கடந்த மாதம், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களாக ஐபோன் 14 சீரீஸ் அறிமுகமானது.

இதற்கிடையில், ​​குபெர்டினோவை தலைமையிடமாக கொண்ட ஆப்பிள், கூடிய விரைவில் அதன் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் மொத்த 5G போன்களும் இதோ!Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் மொத்த 5G போன்களும் இதோ!

எப்போது அறிமுகமாகும்?

எப்போது அறிமுகமாகும்?

ஐபோன் எஸ்இ 4 குறித்து, எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதுவொரு பக்கம் இருக்க, ஐபோன் எஸ்இ 4 ஆனது இந்த மாதமே, அதாவது 2022 அக்டோபர் 31 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்ல.. அம்சங்களும் விலையும் கூட!

அதுமட்டுமல்ல.. அம்சங்களும் விலையும் கூட!

எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதியோடு சேர்த்து, ஐபோன் எஸ்இ 4 ஆனது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்கிற லீக்ஸ் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அடுத்த தலைமுறை iPhone SE மாடல் ஆனது 6.1-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவை பேக் செய்யும்.

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

லேசாக 'காப்பி' அடிக்கும்!

லேசாக 'காப்பி' அடிக்கும்!

ஐபோன் எஸ்இ4 மாடலின் டிஸ்பிளேவின் மேற்புறத்தில் நாட்ச் கட்அவுட் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

அதாவது ஐபோன் எஸ்இ 4 ஆனது ஐபோன் எக்ஸ்ஆரின் வடிவமைப்பை பின்பற்றலாம் என்பது போல் தெரிகிறது.

இதுவரை... 3 மாடல்கள்!

இதுவரை... 3 மாடல்கள்!

நினைவூட்டும் வண்ணம், ஆப்பிள் இதுவரை அதன் பட்ஜெட் ஐபோன் சீரிஸின் கீழ், அதாவது எஸ்இ சீரிஸின் கீழ் மொத்தம் 3 மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐபோன் எஸ்இ-யின் மூன்றாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது; அது ஐபோன் எஸ்இ (2022) ஆகும்; அதன் விலை ரூ.43,900 ஆகும்!

அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?

ஐபோன் எஸ்இ 4 என்ன விலைக்கு வரும்?

ஐபோன் எஸ்இ 4 என்ன விலைக்கு வரும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 4 ஆனது ரூ.33,674 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் இந்த விலை நிர்ணயம் எந்த அளவிற்கு உண்மையானதாக இருக்குமென்று தெரியவில்லை.

ஆனால் இது பெரும்பாலும் ஒரு 5ஜி போனாகவே வெளியாகும். மேலும் பட்ஜெட் விலை நிர்ணயத்தின் காரணமாக இந்த மாடலில் ஃபேஸ் ஐடி இடம்பெறாமல் போகலாம்!

4.7 இன்ச் எங்கே.. 6.1 இன்ச் எங்கே?

4.7 இன்ச் எங்கே.. 6.1 இன்ச் எங்கே?

நினைவூட்டும் வண்ணம், iPhone SE (2022) ஆனது 4.7 இன்ச் என்கிற சிறிய அளவிலான டிஸ்பிளேவையே வழங்குகிறது. அதுவொரு ரெடினா எச்டி டிஸ்ப்ளே ஆகும்.

பார்க்க ஐபோன் 8-ஐ போலவே இருக்கும் 2022 மாடல் ஆனது ஆப்பிளின் A15 Bionic சிப்செட் மூலம இயக்கப்படுகிறது.

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

அது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

அது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

ஐபோன் எஸ்இ 2022 மாடல் ஆனது சிங்கிள் 12 மெகாபிக்சல் ரியர் கேமராவை கொண்டுள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை - முன்பக்கத்தில் உள்ள 7 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஏற்றுக்கொள்கிறது!

256GB வரையிலான ஸ்டோரேஜை வழங்கும் இந்த மாடல் பேஸ் ஐடி அம்சத்தையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
iPhone SE 4 Tipped to Pack 6 1 inch Top Notch Display Check Expected Launch Date Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X