Home
Mobile

ஒற்றை கண் கேமராவுடன் iPhone SE 4 போன் ரெடியா? என்ன விலை? எப்போது அறிமுகம்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போனாக விரைவில் வெளிவர காத்திருக்கும் ஐபோன் (iPhone) சாதனம் தான் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் வெளிவரவிருக்கும் இந்த புதிய ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) ஸ்மார்ட்போனை பற்றி பல மாதங்களாக பல விதமான லீக் தகவல்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆப்பிள் ரசிகர்களுக்கு நீங்காத பெரிய குழப்பம் ஒன்று இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

முதலில் 4 மாதங்களுக்கு முன்பு வெளியான லீக் தகவலில், வெளிவரவிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) சாதனம் ஒற்றை கண் போன்ற பெரிய கேமரா சென்சார் உடன் ஒரே ஒரு கேமராவை மட்டும் கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான மற்றொரு லீக் தகவலில் iPhone SE 4 சாதனம் டூயல் கேமரா அமைப்பை பெரும் என்று கூறப்பட்டிருந்தது.

ஒற்றை கண் கேமராவுடன் iPhone SE 4 போன் ரெடியா? என்ன விலை?

ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4):

இது ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியது. ஐபோன் SE 4 சாதனம் ஒற்றை கேமரா அமைப்பை கொண்டிருக்குமா அல்லது இரண்டு கேமராக்களை உள்ளடிக்கிய டூயல் கேமரா அமைப்பை கொண்டிருக்குமா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு அதிகரித்தது. இப்போது மீண்டும் ஒரு புதிய லீக் தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியதோடு, ஐபோன் SE 4 டிசைன் பற்றிய குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது போல் தெரிகிறது.

இதற்கு முன்பு வெளியான மற்றொரு லீக் தகவலில் ஐபோன் எஸ்இ 4 சாதனம் ஐபோன் 16 (iPhone 16) வடிவமைப்பை ஒன்றியிருக்கும் என்று தெரிவித்திருந்தது. இப்போது ஐஸ் யூனிவெர்ஸ் வழியாக வெளியான லீக் தகவல், வரவிருக்கும் புதிய iPhone SE 4 சாதனம் ஒற்றை கேமரா கொண்ட சிங்கிள் கேமரா அமைப்பை மட்டுமே கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இத்துடன், iPhone SE 4 ஸ்மார்ட்போன் சாதனம் என்ன என்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்இ 4 சாதனம் 48 மெகா பிக்சல் சிங்கிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.06" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒற்றை கண் கேமராவுடன் iPhone SE 4 போன் ரெடியா?

இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த iPhone SE 3 டிவைஸில் நிறுவனம் 4.7" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஐபோனில் 60Hz ரெஃப்ரஷ் ரேட் கிடைக்கிறது என்றாலும், ஆண்ட்ராய்டு போன்களில் இப்போது 90Hz முதல் 120Hz ரெஃப்ரஷ் ரேட் தரம் வரை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone SE 4 மொபைல் சாதனம் A18 பயோனிக் சிப்செட் உடன் 6GB ரேம் அல்லது 8GB LPDDR5 ரேம் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அலுமினியம் சைட் ஃபிரேம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சிக்னேச்சர் பட்டன் மாடலான ஹோம் பட்டனை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது டச் ஐடி (Touch ID) மற்றும் பேஸ் அன்லாக் ஐடி (Face ID) யுடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஐபோன் எஸ்இ 4 சாதனம் USB-C போர்ட் உடன் வெளிவரும். இந்த போனின் விலை பற்றி பேசுகையில், இது $499 டாலர் விலையுடன் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 41,000 இருக்குமென்று கூறப்படுகிறது. இது வரும் மார்ச் 2025 இல் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone SE 4 specifications surface with single camera bump price and launch details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X