டிவிஸ்டு.. செப்.9-ல் iPhone 16 சீரிஸ் உடன் சேர்ந்து iPhone SE 4 அறிமுகமா? விலை, அம்சங்கள்னு எல்லாமே அவுட்!
iPhone SE 4 Launch Date: ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரிஸ் (Apple iPhone 16 Series) மாடல்கள் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று நடக்கும் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வில் (It's Glowtime Event) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வில் ஆப்பிள் ஏர்போட்ஸ் 4 மாடலின் 2 வேரியண்ட்கள், ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மற்றும் ஐபாட் மினி 7 ஆகியவைகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ப்ளூம்பெர்க்கின் ஒரு புதிய அறிக்கை, ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) உட்பட அப்கிரேட் செய்யப்பட வேண்டிய பல ஆப்பிள் தயாரிப்புகள், குறைந்த கையிருப்பில் இருப்பதாக கூறுகிறது. ஆகையால் ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 4) மாடல் ஆனது எதிர்பார்த்ததை விட விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழியாக வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, ஐபோன் எஸ்இ 3 மாடலின் குறைந்த கையிருப்பானது, செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் ஐபோன் எஸ்இ 4 அறிமுகத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறுகிறது. ஒருவேளை ஆப்பிள் தனது ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் அம்சங்களை பட்ஜெட்-விலை மாடல்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதன் விளைவாக கூட ஐபோன் எஸ்இ 3 மாடலின் கையிருப்பு குறைவாகி இருக்கலாம்.
இருப்பினும் ஆப்பிள் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஐபோன்களை அறிமுகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிகழ்வில், பட்ஜெட் விலை மாடல் ஆன ஐபோன் எஸ்இ 4-ஐ வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதையும் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியின் அறிக்கை ஒப்புக்கொள்கிறது. பெரும்பாலும் ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆனது 2025 மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஐபோன் எஸ்இ 4 மாடலில் என்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சிங்கிள் 48எம்பி ரியர் கேமரா சென்சாருக்கு இடமளிக்கும் வகையில் சிறிய மாற்றத்துடன், ஐபோன் எஸ்இ 4 மாடலின் வடிவமைப்பானது ஐபோன் 14 மாடலை போலவே வைத்திருக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிள் ஐபோன் 16 மாடலில் இடம்பெறவுள்ள அதே வெர்ட்டிக்கல் கேமரா லேஅவுட் ஆனது ஐபோன் எஸ்இ 4 மாடலிலும் இடம்பெறலாம்
அறியாதோர்களுக்கு ஐபோன் 16 ஆனது ஐபோன் எக்ஸ் அல்லது ஐபோன் 13-ஐ நினைவூட்டும் வகையில், செங்குத்தான கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து ஐபோன் எஸ்இ 4-ல் 6.1-இன்ச் டிஸ்பிளே, ஃபேஸ் ஐடி, டிஸ்பிளே நாட்ச், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஆக்ஷன் பட்டன் ஆகியவைகளும் பேக் செய்யப்படலாம். விலையை பொறுத்தவரை, இது $500-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரூ.49,990 க்கு வெளியாகலாம்.
ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் $799 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100) அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (அதாவது தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஐபோன் 16 சீரீஸின் ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
மேற்கண்ட 4 ஐபோன் 16 சீரீஸ் மாடல்களின் இந்திய விலைகளும், அமெரிக்க விலைகளை விட நிச்சயம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 15 ப்ரோ இந்தியாவில் ரூ.1,34,900 க்கும், ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும், ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கும் அறிமுகமானது!


Click it and Unblock the Notifications








