3279mAh பேட்டரி, 6.1-இன்ச் OLED டிஸ்பிளே, 48MP கேமரா! ரூ.41000க்கு புது iPhone.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
ஒருபக்கம்.. ஐபோன் 16-ன் விலை ரூ.80,000-க்கு மேல் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம்.. ஐபோன் 16 சீரீஸோடு பிளஸ் மாடல்கள் நிறுத்தப்படும்; அதற்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சரி அதுவாவது பட்ஜெட் விலைக்கு வருமா என்று கேட்டால்?
கண்டிப்பாக இல்லை. புதிய ஐபோன் 17 ஸ்லிம் மாடலின் விலை நிர்ணயமானது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலை விட அதிக விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஆப்பிள் வரலாற்றிலேயே.. ஒரு மிகப்பெரிய விலை நிர்ணயத்தை ஐபோன் 17 ஸ்லிம் பெறும் என்பது போல் தெரிகிறது.

இப்படியே சென்று கொண்டிருந்தால், கடைசி வரையிலாக ரூ.40,000 பட்ஜெட்டில் கிடைக்கும் மற்ற நிறுவனங்களின் பிளாக்ஷிப் போன்களையும், பிரீமியம் மாடல்களையும் தான் வாங்க வேண்டுமா? ஆப்பிள் பிராண்டின் கீழ் சுமாரான அம்சங்களை பேக் செய்யும் எஸ்இ சீரீஸ் ஆனது சூப்பரான அம்சங்களை பெறவே பெறாதா? என்கிற கேள்விக்கு பதில் - ஐபோன் எஸ்இ 4 தான்!
ஆப்பிள் நிறுவனம் அதன் நான்காவது தலைமுறை ஐபோன் எஸ்இ மாடலில் ஏற்கனவே பணியாற்ற தொடங்கிவிட்டது. இது ஐபோன் எஸ்இ (2022) மாடலின் அப்கிரேடட் வெர்ஷனாக வரும் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட்-விலை ஐபோனின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இது பழைய மாடல்களுடன் ஒப்பிடும் போது சில அற்புதமான புதிய அம்சங்களையும், நல்ல டிசைன் மாற்றத்தையும் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஐபோன் எஸ்இ 4 மாடலானது ஐபோன் 14 மாடலின் வடிவமைப்பை ஏற்று, ஃபேஸ் ஐடி ஆதரவு மற்றும் பெரிய பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. எல்லாவற்றை விடவும் முக்கியமாக இது 6.1-இன்ச் எல்டிபிஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யும்.
பேட்டரியை பொறுத்தவரை, இது ஐபோன் 14 மாடலை போலவே 3279mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி ஐபோன் எஸ்இ 4 மாடலில் நாம் பேஸ் ஐடி அம்சத்தையும் எதிர்பார்க்கலாம். இது ஆப்பிள் நிறுவனத்தின் இன்-ஹவுஸ் 5ஜி மோடம் சிப் மூலம் இயக்கப்படலாம். கடைசியாக இது சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை உள்ளடக்கியிருக்கலாம்.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஜே ரீவ் (@Revegnus1) பகிர்ந்த தகவலின்படி ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4 மாடலின் விலை 500 அமெரிக்க டாலர்களுக்கு கீழே தான் இருக்கும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 41,000 ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் எஸ்இ 2022 மாடலானது 429 அமெரிக்க டாலர்களுக்கு (தோராயமாக ரூ.35,000) அறிமுகமானது.
முதல் ஐபோன் எஸ்இ மாடலானது கடந்த 2016 இல் வெளியிடப்பட்டது. பின்னர் ஐபோன் எஸ்இ-யின் மூன்றாவது ஜெனரேஷன் 2022 இல் இந்தியாவில் ரூ.43,900 க்கு அறிமுகமானது. இது பேஸிக் 64ஜிபி வேரியண்ட்டின் விலையாகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட், 4.7-இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்பிளே, 12 சிங்கிள் ரியர் கேமரா மற்றும் 7 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
ஐபோன் 17 பிளஸ் மாடலை பெயர் குறிப்பிடுவது போலவே, இது தற்போதைய ஐபோன்களை விட "குறிப்பிடத்தக்க வகையில் ஸ்லிம் ஆனதாக " இருக்கும். மேலும் இதில் புதுப்பிக்கப்பட்ட கேமரா செட்டப் போன்ற மேம்பாடுகளையும் நாம் காணலாம். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரீஸின் ஒருபகுதியாக 2025 இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடல், 2017 இல் ஐபோன் எக்ஸ் (iPhone X) அறிமுகம் வழியாக கொண்டுவரப்பட்ட மாற்றங்களை போலவே, ஒரு பெரிய ரீடிசைன் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் எக்ஸ் ஆனது ஃபேஸ் ஐடி (Face ID), ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் கிளாஸ் பேக் (Glass Back) ஆகியவற்றை கொண்டுவந்தது. அதேபோல ஐபோன் 17 ஸ்லிம் ஆனது குறிப்பிடத்தக்க அளவிலான ஸ்லிம் சேஸ் மற்றும் சிறிய டிஸ்பிளே கட்அவுட் ஆகியவற்றை கொண்டுவரலாம்.


Click it and Unblock the Notifications








