Home
Mobile

iPhone SE 4-ஆ iPhone 16e மாடல்-ஆ.. இன்று அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? LIVE ஆக பார்ப்பது எப்படி?

ஒருவழியாக அந்த நாள் வந்துவிட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) அல்லது ஐபோன் 16இ (iPhone 16e) இன்று, பிப்ரவரி 19 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் நடத்தும் முதல் மற்றும் முக்கிய வெளியீட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது

அப்படியான இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? அதாவது ஐபோன் எஸ்இ 4 வெளியீட்டு நிகழ்வை நேரலையில் பார்ப்பது எப்படி? இந்நிகழ்வு சரியாக எத்தனை மணிக்கு தொடங்கும்? ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் 16இ மாடலின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்நிகழ்வில் வேறு என்னென்ன அறிமுகங்களை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

iPhone SE 4-ஆ iPhone 16e மாடல்-ஆ.. இன்று அறிமுகம்!

ஐபோன் எஸ்இ 4 வெளியீட்டு நிகழ்வு -நேரம் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்வானது இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும். ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம், யூட்யூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் வழியாக இந்த வெளியீட்டு நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பும்.

இருப்பினும், சில அறிக்கைகள் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் எஸ்இ 4 மாடலை அறிமுகம் செய்ய ஒரு முழு அளவிலான முக்கிய குறிப்புக்கு பதிலாக, ஒரு செய்தி வெளியீட்டின் மூலம் அமைதியான முறையில் இந்த வெளியீட்டை தேநடத்தி முடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் 16இ - இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஆப்பிளின் எஸ்இ சீரீஸ் மாடல்கள் குறைந்த விலையில் சக்திவாய்ந்த ஹார்ட்வேர்களை வழங்குவதற்காக அறியப்படுகிறது. ஐபோன் எஸ்இ 4 ஆனது வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு விலைகளில் அறிமுகமாகும். அப்படியாக இந்தியாவில் இது சுமார் ரூ.50,000 பட்ஜெட்டில், இன்னும் குறிப்பிட்டு சொன்னால் ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எஸ்இ 4 - என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது பழைய டச் ஐடி ஹோம் பட்டனில் இருந்து விலகி, மெலிதான பெசல்கள் மற்றும் ஃபேஸ் ஐடியுடன் கூடிய ஐபோன் 14 பாணியிலான டிசைனை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக்ஸ்களை நம்பினால், இது 6.1-இன்ச் OLED டிஸ்பிளே, 48எம்பி ரியர் கேமரா, ஆப்பிளின் சொந்த ஏ18 சிப்செட் ஆகியவைகளை கொண்டிருக்கும்.

டோங்கா (Donga) என்கிற தென் கொரிய வெளியீட்டின் ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, டிஎஸ்எம்சி (TSMC) ஆல் தயாரிக்கப்பட்ட ஆப்பிளின் முதல் தலைமுறை 5ஜி மோடமில், எம்எம்வேவ் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஆதரவு இல்லை என்கிறது. இந்த மோடம் தான் ஐபோன் எஸ்இ 4 மாடலில் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மோடமில் எம்எம்வேவ் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஆதரவு (mmWave 5G Technology Support) இல்லாத பட்சத்தால், ஐபோன் எஸ்ஓ 4 மாடலின் நெட்வொர்க் திறன்கள் கட்டுப்படுத்தப்படலாம், குறிப்பாக எம்எம்வேவ் நெட்வொர்க்குகள் அதிகமாக உள்ள பகுதிகளில்! அதாவது இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஐபோன் எஸ்இ 4 மாடலில் 5ஜி ஆதரவு (5G Support) இருக்கும். ஆனால் அது ஐபோன் 16 சீரீஸில் உள்ளதை போல வேகமான 5ஜி ஸ்பீடை (5G Speed) வழங்காது; மாறாக சற்றே குறைவான 5ஜி ஸ்பீடை வழங்கும்.

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 சீரீஸ் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்75 உடன் வருகின்றன. இதனுடன் ஒப்பிடும்போது ஆப்பிளின் மோடம் குறைவான கேரியர் ஒருங்கிணைப்பு அம்சங்களை வழங்குவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, ஐபோன் எஸ்இ 4 மாடலானது அதன் பிளாக்ஷிப் "சகாக்களை" விட மெதுவான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை (Uploading and Downloading Speed) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் பிப்.19 வெளியீட்டு நிகழ்வில் வேறு என்னென்ன புதிய அறிமுகங்களை அல்லது அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் எஸ்இ 4 உடன் சேர்த்து, அடுத்த தலைமுறை எம்4 சிப்பை கொண்ட புதிய மேக்புக் ஏர் மாடலை அறிமுகப்படுத்தலாம் என்றும் eஎதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சில சர்ப்ரைஸான அறிவிப்புகளையும் ஆப்பிள் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone SE 4 iPhone 16e Apple Launch Event 2025 Feb 19 India Time Watch Live Streaming What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X