புதிய iPhone 16e மாடல்.. 2 வருஷம் காத்து இருந்ததுக்கு பலன்.. 4.7-இன்ச் இல்ல 6.06-இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம்!
பட்ஜெட் விலை ஐபோனிற்காக காத்திருப்பவர்களுக்கு வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்பிள் நிறுவனம் அதன் டோன்டவுன் ஐபோன் ஆன ஐபோன் எஸ்இ மாடலின் புதிய வெர்ஷனை.. அதாவது ஐபோன் எஸ்ஓ 4 மாடலை (iPhone SE 4) ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 2025 என்கிற லான்ச் டைம்லைன் மட்டுமே ஐபோன் எஸ்இ 4 மாடலுடைய சர்ப்ரைஸ் ஆக இருக்கப்போவதில்லை. டிசைன், மாடல் பெயர், டிஸ்பிளே, சிப்செட், ரேம், கேமரா என பல விஷயங்களில் - ஐபோன் எஸ்இ 4 நம்மை சர்ப்ரைஸ் செய்யும் என்பது போல் தெரிகிறது. ஆன்லைனில் லீக்கான ஐபோன் எஸ்இ 4 மாடலின் டம்மி புகைப்படங்களும் கூட அதை உறுதிப்படுத்துகின்றன.

டிப்ஸ்டர் சோனி டிக்சன் (@SonnyDickson) ஐபோன் எஸ்இ 4 மாடலின் டம்மிகளின் படங்களை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். அதன் வழியாக நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபோன் எஸ்இ ஆனது பழைய ஐபோன் 14 மாடலின் வடிவமைப்பை "ஏற்றுக்கொள்ளும்" என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அலுமினிய ஃபிரேம், கிளாஸ் பேக் மற்றும் சிங்கிள் லென்ஸ் ரியர் கேமரா என ஐபோன் எஸ்4 மாடல் ஆனது பார்க்க ஐபோன் 14 மாடலை போலவே உள்ளது!
ஐபோன் எஸ்இ 4 மாடலில் ஆக்ஷன் பட்டன் அல்லது கேமரா கன்ட்ரோல் பட்டன் இடம்பெறும் என்று கூறப்பட்டாலும், டம்மி புகைப்படங்களில் அதுகுறித்த எந்த அடையாளத்தையும் காண முடியவில்லை. இது வெறும் டம்மி புகைப்படங்கள் தான் என்பதால், குறிப்பிட்ட அம்சங்கள் சேர்க்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறிவிட முடியாது; மாறாக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகி கொண்டே போகிறது என்று கூறலாம்.
ஐபோன் எஸ்இ 4 மாடலில் ஆக்ஷன் பட்டன் அல்லது கேமரா கன்ட்ரோல் பட்டன்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றால், கேஸ் தயாரிப்பாளர்கள் தங்கள் வடிவமைப்புகளை சரிசெய்ய வேண்டி இருக்கும். அதுவே ஐபோன் எஸ்இ 4 மாடலில் ஆக்ஷன் பட்டன் அல்லது கேமரா கன்ட்ரோல் பட்டன் சேர்க்கப்படாவிட்டால், அது ஐபோன் 14 உடன் ஒற்றுபோகும்படி இருக்கும்.
டிசைனுக்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆனது ஐபோன் 16இ (iPhone 16e) என்று மறுபெயரிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 சீரீஸ் சில முக்கிய கூறுகள் உட்பட பல குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் ஐபோன் 16இ மாடலில் இடம்பெறலாம். இது உண்மையாக இருந்தால், ஐபோன் 16இ மாடலானது ஆப்பிளின் பட்ஜெட்-விலை ஐபோன் சீரீஸில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கும்.
இதுதவிர்த்து டிஸ்பிளே, சிப்செட், ரேம், கேமரா என பல விஷயங்களில் ஐபோன் எஸ்இ 4 ஆனது அதன் முன்னோடியை விட பல மேம்பாடுகளை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பெரிய 6.06-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். நினைவூட்டும் வண்ணம் முந்தைய மாடலில் 4.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது
மேலும் ஐபோன் எஸ்இ 4 ஆனது ஏ18 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று வதந்தி பரவுகிறது. இது கணிசமான செயல்திறன் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மற்றொரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை பொறுத்தவரை இது முந்தைய 4ஜிபி ரேம்-ல் இருந்து 8ஜிபி ரேம் ஆக அதிகரிப்பை பெறவும் வாய்ப்புள்ளது.
8ஜிபி ரேம் என்பது நிச்சயம் மல்டி-டாஸ்கிங்கை மேம்படுத்தும்; கூடவே மேலதிக ஆப்களை இயக்கவும் அனுமதிக்கும். இது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கடைசியாக ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் 16இ மாடல் ஆனது 48 மெகாபிக்சல் ரியர் கேமராவுக்கு மேம்படுத்தப்படலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








