நம்பமுடியாத விலைக்குறைப்பு: மிட்-ரேன்ஜ் விலைக்கு ஆப்பிள் எஸ்இ.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளில் ஐபோன் எஸ்இ மட்டுமே இந்தியாவில் பெறக்கூடிய மிகவும் மலிவான ஐபோன்களில் ஒன்றாகும். இப்போது அது இன்னும் மலிவான விலைக்கு கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் ஒன்றை வாங்கிவிட வேண்டுமென்ற துடிக்கும் ஆப்பிள் பிரியர்களுக்கு இதுவொரு பொன்னான வாய்ப்பாகும், பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நம்பமுடியாத விலைக்குறைப்பு: மிட்-ரேன்ஜ் விலைக்கு ஆப்பிள் எஸ்இ.!

ஆப்பிளின் சமீபத்திய கருவியான ஐபோன் எக்ஸ் ஆனது கிட்டத்தட்ட ரூ.90,000/- என்கிற விலைமதிப்பை பெற்று எட்டாக்கனியாக இருக்கும் மறுகையில் ஐபோன் எஸ்இ மீதான நிகழ்த்தப்பட்டுள்ள அதிரடி விலைகுறைப்பானது ஆப்பிள் பிரியர்களை தன்வசம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நம்பமுடியாத விலைக்குறைப்பு

நம்பமுடியாத விலைக்குறைப்பு

ரூ.26,000/-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது தற்போது ரூ.17,999/-க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.8,000/- என்கிற நம்பமுடியாத விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இந்த புதிய விலையிலான ஐபோன் எஸ்இ சாதனத்தை அமேசான் இந்தியா வழியாக வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன்களின் விலை உயர்ந்தது

ஐபோன்களின் விலை உயர்ந்தது

குறிப்பிடத்தக்க வகையில், ஐபோன் எஸ்இ மீது நிகழ்த்தப்படும் இரண்டாவது விலைக்குறைப்பு இதுவாகும். கடந்த வாரம், ஆப்பிள் கருவிகள் மீதான விலை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், அதன் ஐபோன்களின் விலை உயர்ந்தது.

காரணம்

காரணம்

அதிர்ஷ்டவசமாக, ஐபோன் எஸ்இ மாடல் மட்டும் இந்த விலை உயர்விலிருந்து தப்பித்தது. 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலே விஸ்டன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் ஐபோன் எஸ்இ அசெம்பிள் செய்யப்படுகிறது என்பதே அதற்கு காரணம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பெரும்பாலான மக்களுக்கு புதிய விலையில் கிடைக்கும் ஐபோன் எஸ்இ மீது ஆர்வம் கிளம்ப வாய்ப்பில்லை தான். ஏனெனில் வெளியான ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் சாதனைகளின் வடிவமைப்பு மிகவும் ஆச்சரியப்படுத்தும்படி உள்ளது.

ஐஓஎஸ் 11

ஐஓஎஸ் 11

இருப்பினும் கூட ஐபோன் எஸ்இ ஆனது நிறுவனத்தின் சமீபத்திய ஐஓஎஸ் 11-ஐ ஆதரிக்கிறது, ஆனால் பெட்டிக்கு வெளியே ஐஓஎஸ் 10 கொண்டு இயங்கும். ஆக ஒரு திடமான செயல்திறன் மட்டுமில்லாமல், பெரிய கேமராக்களையும் ஐபோன் எஸ்இ உறுதி செய்கிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஐபோன் எஸ்எஸ் சாதனத்தின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், 4 இன்ச் (640x1136) டிஸ்ப்ளே மற்றும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்து நிறுவனத்தின் சொந்த ஏ9 சிப் கொண்டு இயங்குகிறது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில், இந்த தொலைபேசி 5-எலெமென்ட் லென்ஸ் மற்றும் ட்ரூ டோன் பிளாஷ் உடனான 12-மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மற்றும் ஒரு 1.2 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவை கொண்டுள்ளது.

மிட்-ரேன்ஜ் கருவி

மிட்-ரேன்ஜ் கருவி

ஐபோன் எக்ஸ் போலல்லாமல், ஐபோன் எஸ்இ ஆனது டச் ஐடியுடன் வருகிறது, ஆப்பிளின் பழைய பயோமெட்ரிக் தீர்வை விரும்பாத ரசிகர்கள் இதை தேர்வு செய்யவது சற்று கடினம்தான். மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ், நோக்கியா 6 மற்றும் சியோமி மி ஏ1 போன்ற மிட்-ரேன்ஜ் கருவிகளுக்கு எதிராக களமிறங்கும் முதல் ஐபோன் இதுவென்றே கூறலாம்.

ரூ.15,100/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை

ரூ.15,100/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை

மேற்குறிப்பிட்ட மூன்று ஸ்மார்ட்போன்களுமே ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள் என்பதும், அவைகள் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ9 சிப்செட்டை விட மெதுவாகவே இயங்கும் செயலிகள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏவிலைக்குறைப்பு மட்டுமினிற் இக்கருவிக்கு ரூ.15,100/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும் அமேசான் இந்தியா அறிவித்துள்ளது நிஜமாகவே ஒரு இனிப்பான ஒப்பந்தம் தான்.

Best Mobiles in India

English summary
iPhone SE 32GB gets huge Rs 8,000 discount, now sells for Rs 17,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X