விரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் வரும் 2020 மார்ச் மாதம் தனது ஐபோன் எஸ்இ2 சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும் ஆப்பிள் நிறுவனம் கூறிய அறிக்கையில் இந்த ஐபோன் எஸ்இ2 சாதனம் ஆனது ஐபோன் 8-சாதனத்தை விட சிறப்பான அம்சங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ2 சாதனம்

ஐபோன் எஸ்இ2 சாதனம்

குறிப்பாக இந்த ஐபோன் எஸ்இ2 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டால் உடனே ஐபோன் 8சாதனத்தின் விற்பனை நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஐபோன் எஸ்2 சாதனத்தை அதிகளவு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

4.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே

4.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே

மேலும் இப்போது கசிந்த தகவல்களின் அடிப்படையில் ஐபோன் எஸ்இ2 சாதனம் ஆனது 4.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவடிவமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ 11: கடைசியில இத கவனிக்க மறந்துட்டமே.! வசமாக சிக்கிய நாசா.!அப்பல்லோ 11: கடைசியில இத கவனிக்க மறந்துட்டமே.! வசமாக சிக்கிய நாசா.!

ஆய்வாளர் Ming-Chi Kuo

Apple-watching ஆய்வாளர் Ming-Chi Kuo கூறியது என்னவென்றால் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ, புதிய மேக்புக் மற்றும் இந்த ஐபோன் எஸ்இ2 சாதனம் 2020-ம் ஆண்டில் முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படும் எனத்தெரிவித்தார்

ஸ்பேஸ் கிரே, சில்வர்

ஸ்பேஸ் கிரே, சில்வர்

ஐபோன் எஸ்இ 2 ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் எனத்தகவல் வெளிவந்துள்ளது. ஐபோன் எஸ்இ 2 இல் 3D டச் இருக்காது, குவோ (Ming-Chi Kuo)அறிக்கைவெளிப்படுத்துகிறது.

 4ஜிபி/6ஜிபி ரேம்

4ஜிபி/6ஜிபி ரேம்

குறிப்பாக ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 சாதனம் ஆனது Touch ID fingerprint reader-ஐ பயன்படுத்தும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதில் பேஸ் ஐடி இடம்பெறாது எனவும் தகவல் கசிந்துள்ளது.

ஐபோன் எஸ்2 சாதனம் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவரும்எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

உபர் ஈட்ஸ்: உணவு விநியோகம் செய்ய புதிய டிரோன் சேவை அறிமுகம்!உபர் ஈட்ஸ்: உணவு விநியோகம் செய்ய புதிய டிரோன் சேவை அறிமுகம்!

399 டாலர்

399 டாலர்

மேலும் ஐபோன் எஸ்இ2 சாதனம் 399 டாலர் (ரூ.28,200) விலையில் அறிமுகம் செய்யப்படும் எனவும், புதிய ஐஒஎஸ்இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone SE 2 to Launch in March, Enter Mass Production in January: Ming-Chi Kuo: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X