வெளியாகும் ஐபோன் எஸ்இ2 இந்தியாவில் மட்டும் மலிவாக கிடைக்கும்; ஏன்.?

அடுத்து வெளியாகும் ஒரு ஐபோன் ஆனது சிறியதாகவும், மலிவானதாகவும் இருக்க வேண்டும் உடன் நிறைய அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து இருந்தால்.. உங்கள் எண்ணம் பலிக்க போகிறது என்றே கூறலாம்.

|

அடுத்து வெளியாகும் ஒரு ஐபோன் ஆனது சிறியதாகவும், மலிவானதாகவும் இருக்க வேண்டும் உடன் நிறைய அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து இருந்தால்.. உங்கள் எண்ணம் பலிக்க போகிறது என்றே கூறலாம்.

வெளியாகும் ஐபோன் எஸ்இ2 இந்தியாவில் மட்டும் மலிவாக கிடைக்கும்; ஏன்.?

ஆம், இந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் ஐபோன் எஸ்இ-ன் புதிய பதிப்பானது, நாம் கண்ட அத்தனை கனவுகளையும் நிறைவேற்றும் வண்ணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான லீக்ஸ் புகைப்படங்கள் மற்றும் அம்சங்களும் அதை உறுதிப்படுத்தியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் வெளியாகும் ஐபோன் எஸ்இ 2 ஆனது ஒரு மலிவான ஐபோன் எக்ஸ் பதிப்பாக இருக்கும்.!

என்ன விலைக்கு வெளியாகும்.? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்.?

என்ன விலைக்கு வெளியாகும்.? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்.?

ஆய்வாளர் மிங்-சி குவோவின் படி, இந்த ஆண்டு ஆப்பிள் ஒரு மலிவான ஐபோனை அறிமுகப்படுத்துகிறது. அது ஒரு எல்சிடி டிஸ்பிளே கொண்ட 6.1 இன்ச் மாடலாக இருக்கும். ஆக வெளியாகப்போவது ஒரு சிறிய ஐபோனாக இல்லாவிட்டாலும் கூட, நிச்சயமாக ஐபோன் எஸ்இ தொடரின் கீழ் தான் வழியாகும். சரி எப்போது வெளியாகும்.? என்ன விலைக்கு வெளியாகும்.? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்.?

செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும்.!

செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும்.!

கடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் மாதம் நடக்கும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்து வெளியான இந்த அறிக்கையை ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ வெளியிட்ட தகவலுடன் முரண்பட்டது. அவரின் கருத்துப்படி, ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்றும் பரிந்துரைத்துகின்றன.

மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.?!

மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.?!

பின்னர் அதை உறுதியாக்கும் வண்ணம் ஒரு தகவல் வெளியானைது. அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆப்பிள் வழக்கமாக வெவ்வேறு பிராந்திய மாறுபாட்டிற்கான தனித்துவமான மாடலை பயன்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன.

விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயம்.!

ஐபோன் எஸ்இ 2 விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, அதன் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல் ஆனது இங்கிலாந்தில் (முறையே) 379 பவுண்டுகள் மற்றும் 479 பவுண்டுகளுக்கு வாங்க கிடைக்கும். ஒப்பிடுகையில், அமெரிக்காவில் ஐபோன் எஸ்இ 2 ஆனது முறையே 399 டாலருக்கும் மற்றும் 449 டாலருக்கும் வாங்க கிடைக்கும். கூறப்படும் ஐபோன் எஸ்இ 2 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் விலையில் அறிமுகமாலாம். அதாவது ரூ.20,000/-க்கும் குறைவான ஒரு விலைப்புள்ளியில் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கலாம். ஆக மொத்தம், ஐபோன் எஸ்இ 2-வின் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.25,000/-க்கும் குறைவாகவும், 128 ஜிபி மாடல் ஆனது ரூ.30,000/- என்கிற புள்ளியிலும் தான் இந்திய சந்தையை எட்டும்.

கிடைக்கும் தன்மை மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்.!

கிடைக்கும் தன்மை மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்.!

சீனாவிலும் இந்தியாவிலும் "குறைந்த விலை சந்தை"ஐ கைப்பற்றும் முயற்சியில் தான் இந்த குறைந்த-விலை ஐபோன் வெளியாகிறது என்பதால், இதன் இந்திய வெளியீடு மிக விரைவில் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் பிற பிராந்தியங்களில் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியாவில் ஆரம்பிக்கப்படலாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்2 ஆனது 4.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகலாம். அதாவது ஐபோன் எஸ்இ-ஐ விட 0.2 அங்குலம் அதிகமாக இருக்கும். மேலும் ஐபோன் எஸ்இ 2 ஆனது அதன் முன்னோடிகளின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எக்ஸ் போன்ற மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம்.!

ஐபோன் எக்ஸ் போன்ற மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம்.!

சமீபத்திய கசிவின் படி, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எக்ஸ் போன்ற, பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் பேஸ் ஐடி ஆதரவைக் கொண்டதாக இருக்கும். ஆனால் சீனாவில் இருந்து வெளியான சமீபத்திய அறிக்கைகளானது, இந்த ஐபோன் மாடல் ஆனது அதன் முன்பக்கத்தில் டச் ஐடி ஹவுஸ் பட்டனை தக்கவைத்துக் கொள்வதாக கூறியுள்ளன. எது எப்படியோ, ஐபோன் எஸ்இ 2-வில் மிக மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம். மேலும் சமீபத்திய ஐபோன்களைப் போலவே, ஐபோன் எஸ்இ 2 ஆனதும், பின்புற கண்ணாடி வடிவமைப்பு உடனான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இயங்கலாம்.

சற்று பெரிய பேட்டரி திறன்.!

சற்று பெரிய பேட்டரி திறன்.!

இதர அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஆப்பிளின் A10 SoC, 2ஜிபி ரேம் உடனான 32ஜிபி / 128ஜிபி சேமிப்பு விருப்பங்கள், 4கே வீடியோ பதிவு ஆதரவு மற்றும் செல்பீக்கள் மற்றும் பேஸ்டைம் அழைப்புகளை வழங்கும் ஒரு 5எம்பி முன்பக்க கேமரா, பின்பக்கத்தில் ஓரு 12எம்பி ஐசைட் கேமரா, சற்று பெரிய 1700mAh பேட்டரி திறன் போன்ற அம்சங்களை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இது சமீபத்திய ஐபோன்களை விட மிக மிக மலிவு விலைக்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல ஐபோன் எஸ்இ2 அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
iPhone SE 2 release date, price & tech specs. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X