ரூ.20,000/-ஐ ரெடியாக வச்சிக்கோங்க; அடுத்த ஐபோன் பற்றி ஒரு குட் நியூஸ்.!

எது எப்படியோ, ஐபோன் எஸ்இ 2-வில் மிக மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம்.

|

கடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் மாதம் நாடாகும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று கூறி இருந்தது. அறியாதோர்களுக்கு, WWDC 2018 நிகழ்வானது வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடைபெறும்.

சீனாவில் இருந்து வெளியான இந்த அறிக்கையை ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ வெளியிட்ட தகவலுடன் முரண்பட்டது. அவரின் கருத்துப்படி, ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்று பரிந்துரைத்துள்ளன.

மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.?

மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.?

அதை உறுதியாக்கும் வண்ணம், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

ஆப்பிள் வழக்கமாக வெவ்வேறு பிராந்திய மாறுபாட்டிற்கான தனித்துவமான மாடலை பயன்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன. அப்படியாக வெளியாகும் ஐபோன் எஸ்இ 20-யின் அம்சங்கள் என்னவாக இருக்கும்.? மிக முக்கியமாக இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் தான் வெளியாகும்.!

மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் தான் வெளியாகும்.!

கூறப்படும் ஐபோன் எஸ்இ 2 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் விலையில் அறிமுகமாலாம். அதாவது ரூ.20,000/-க்கும் குறைவான ஒரு விலைப்புள்ளியில் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கலாம். ஆக மொத்தம், ஐபோன் எஸ்இ 2-வின் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.25,000/-க்கும் குறைவாகவும், 128 ஜிபி மாடல் ஆனது ரூ.30,000/- என்கிற புள்ளியிலும் தான் இந்திய சந்தையை எட்டும்.

இந்தியாவும், இந்தியர்களும் தான் குறி.!

இந்தியாவும், இந்தியர்களும் தான் குறி.!

இரண்டாவது தலைமுறை ஐபோன் எஸ்இ-யின் முக்கிய சந்தையானது இந்தியா என்றே கூறப்படுகிறது. ஆக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அறிமுகமான அதே ஜூன் மாதத்தில், இந்திய விற்பனையை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்2 ஆனது 4.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். அதாவது ஐபோன் எஸ்இ-ஐ விட 0.2 அங்குலம் அதிகம். மேலும் ஐபோன் எஸ்இ 2 ஆனது அதன் முன்னோடிகளின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)
ஐபோன் எக்ஸ் போன்ற மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம்.!

ஐபோன் எக்ஸ் போன்ற மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம்.!

சமீபத்திய கசிவின் படி, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எக்ஸ் போன்ற, பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் பேஸ் ஐடி ஆதரவைக் கொண்டதாக இருக்கும். ஆனால் சீனாவில் இருந்து வெளியான சமீபத்திய அறிக்கைகளானது, இந்த ஐபோன் மாடல் ஆனது அதன் முன்பக்கத்தில் டச் ஐடி ஹவுஸ் பட்டனை தக்கவைத்துக் கொள்வதாக கூறியுள்ளன. எது எப்படியோ, ஐபோன் எஸ்இ 2-வில் மிக மெல்லிய பெஸல்களை எதிர்பார்க்கலாம். மேலும் சமீபத்திய ஐபோன்களைப் போலவே, ஐபோன் எஸ்இ 2 ஆனதும், பின்புற கண்ணாடி வடிவமைப்பு உடனான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இயங்கலாம்.

சற்று பெரிய பேட்டரி திறன்.!

சற்று பெரிய பேட்டரி திறன்.!

இதர அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 2 ஆனது ஆப்பிளின் A10 SoC, 2ஜிபி ரேம் உடனான 32ஜிபி / 128ஜிபி சேமிப்பு விருப்பங்கள், 4கே வீடியோ பதிவு ஆதரவு மற்றும் செல்பீக்கள் மற்றும் பேஸ்டைம் அழைப்புகளை வழங்கும் ஒரு 5எம்பி முன்பக்க கேமரா, பின்பக்கத்தில் ஓரு 12எம்பி ஐசைட் கேமரா, சற்று பெரிய 1700mAh பேட்டரி திறன் போன்ற அம்சங்களை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இது சமீபத்திய ஐபோன்களை விட மிக மிக மலிவு விலைக்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone SE 2 could be Apple’s next smartphone; expected to launch this June at WWDC 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X