Home
Mobile

iPhone மீதான வரிகள் குறைப்பு.. சர்ருன்னு ரூ. 6000 விலை குறைந்த iPhone மாடல்கள்.. ஐபோன் வாங்க சரியான நேரம் எது?

இந்திய அரசாங்கம் மொபைல் போன்கள் (Mobile Phones) மற்றும் மொபைல் பிசிபிக்கள் (Mobile PCBAs) மீதான சுங்க வரியை முந்தைய வாரத்தில் 20% முதல் 15% வரை குறைத்ததால், இப்போது ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அனைத்து ஐபோன் (iPhone) மாடல்ககளின் விலையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக குறைத்துள்ளது. இதன் மூலம் ஐபோன் சாதனங்களின் மீது இப்போது இந்தியா மக்களுக்கு ரூ. 6000 வரை விலை குறைப்பு கிடைத்துள்ளது. ஐபோன் வாங்க உங்களுக்கு திட்டமிருக்கிறது என்றால், இது தான் மிகச்சரியாக நேரம் மக்களே.

ஆப்பிள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ரூ. 6000 விலை குறைக்கப்படுகிறது. அதேபோல், ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலுக்கு ரூ. 5500 விலையும், ஐபோன் எஸ்இ 3 i(Phone SE 3) மாடல்கள் ரூ. 2300 விலைக் குறைப்பை பெற்றுள்ளது.

iPhone மீதான வரிகள் குறைப்பு.. சர்ருன்னு ரூ. 6000 விலை குறைந்த iPhone

iPhone மீதான வரிகள் குறைப்பு.. சர்ருன்னு ரூ. 6000 விலை குறைந்த ஐபோன்கள்:

ஐபோன் 13 (iPhone 13), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus), ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடல்கள் மீது ரூ. 300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் டாப்-எண்ட் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களைத் தவிர பெரும்பாலான ஐபோன் மாடல்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், அவை மட்டுமே பெரிய விலைக் குறைப்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 15 ப்ரோ 512GB சாதனம் ரூ.5200 விலை குறைப்பையும், ஐபோன் 15 ப்ரோ 1TB மாடல் ரூ.5500 விலை குறைவை பெற்றுள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256GB சாதனம் ரூ.5900 விலை குறைப்பையும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 512GB மாடல் ரூ.6000 விலை குறைவை பெறுகிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனம் 1TB மாடல் ரூ. 5500 விலை குறைப்பை பெறுகிறது.

ஐபோன் 13 (iPhone 13) 128GB மாடல், ஐபோன் 13 256GB, ஐபோன் 13 512GB, ஐபோன் 14 128GB, ஐபோன் 14 256GB, ஐபோன் 14 512GB, ஐபோன் 14 பிளஸ் 128GB, ஐபோன் 14 பிளஸ் 256GB, ஐபோன் 14 பிளஸ் 256GB, ஐபோன் 15 128GB, ஐபோன் 15 256GB, ஐபோன் 15 512GB, மற்றும்

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மீது ரூ. 6000 வரை விலை குறைப்பு:

ஐபோன் 15 பிளஸ் 128GB, ஐபோன் 15 பிளஸ் 256GB, ஐபோன் 15 பிளஸ் 512GB, போன்ற மாடல்களின் மீது ரூ. 300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஐபோன் எஸ்இ 3 64GB, ஐபோன் எஸ்இ 3 128GB, ஐபோன் எஸ்இ 3 256GB மாடல்கள் மீது ரூ. 2300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிலையான எம்ஆர்பியை நிர்ணயித்தாலும், சில மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்கள் ஸ்மார்ட்போன்களை மலிவான விலையில் விற்கிறார்கள்.

எனவே நீங்கள் இனி ஆப்பிள் ஐபோன் மாடல்களை ஆன்லைனில் இன்னும் மலிவாக வாங்க வாய்ப்புள்ளது. அக்டோபர் தொடக்கத்தில் தொடங்கவிருக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் விற்பனையின் போது ஐபோன்கள் இன்னும் மலிவானதாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் மலிவான விலையில் நீங்கள் ஐபோன் வாங்க திட்டமிட்டால், சிறப்பு விற்பனை வரை காத்திருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone prices slashed by up to Rs 6000 in India as the Indian government decreased the customs duty Tax on mobiles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X