Subscribe to Gizbot

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

Posted By:

இன்று சந்தையில் ஏராளமான மொபைல்கள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அவற்றில் எப்போதும் முதன்மை இடம் என்றால் அது ஆப்பிள் மட்டும் தான், என்னதான் சாம்சங் ஆண்ட்ராய்டை வைத்து கலக்கி வந்தாலும் ஆப்பிளின் தரத்தை அதனால் என்றுமே கொண்டு வர முடியாது எனலாம் நண்பரே.


அந்த அளவுக்கு ஆப்பிள் பொருட்களுக்கு உலகளவில் நல்ல பெயர் உள்ளது இது 2008 ஆம் ஆண்டு இணைய வெளியில், ஆப்பிள் சாதனங்களுக்கான புரோகிராம்களை பதிந்து வாடிக்கை யாளர்களுக்கு, இலவசமாகவும், கட்டணம் பெற்றும் தர தொடங்கிய ஆப்பிள் ஸ்டோர், தன் ஐந்தாவது ஆண்டினைத் தற்போது எட்டியுள்ளது.

ஸ்மார்ட் போன், அழைப்புகளை ஏற்படுத்தவும், பெறவும், மின் அஞ்சல்களை அனுப்பிப் பெறவும், இணையத்தை உலா வர வும் மட்டும் பயன்படும் ஒரு சாதனம் என்ற நிலையை, இந்த ஆப்பிள் ஸ்டோர் மாற்றியது இது அன்றை. காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.

மேலும் குறிப்பாக, மொபைல் சாதனங்களுக்கான அப்ளிகேஷன்களை விற்பனை செய்திடும் ஒரு சந்தை என்ற செயலாக்கத்தை, ஆப்பிள் ஸ்டோர் தான் முதலில் ஏற்படுத்தியது அதன் மூலம் மட்டும் தற்போது ஆப்பிள் பெரும் வருவாய் பெற்று வருகிறது என்று சொல்லலாம்.

அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைவருக்கும் உரியதே என்ற கோட்பாட்டுடன், அனைத்தையும் ஓர் இடத்திற்குக் கொண்டு வந்து புதிய பாதையை உருவாக்கியது ஆப்பிள் ஸ்டோர்இதனைப் போல, இதற்கு முன் எதுவும் இருந்ததில்லை இனி எதிர்காலத்தில் வருமா என்றும் தெரியவில்லை.

அடிப்படையில் இது டிஜிட்டல் உலகை மாற்றியது என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். இதன் பின்னர் வந்த கூகுள் பிளே ஸ்டோர், பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் எண்ணிக்கையில், மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும், முக்கிய அதிகப் பயனுள்ள பல அப்ளிகேஷன்களுக்கு, ஆப்பிள் ஸ்டோர் பெயர் பெற்று விளங்குகிறது.

அந்த வகையில் உங்களுக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு எனில் இதோ ஆப்பிளின் ஐ போன் மற்றும் ஐ பேடில் இயங்கக்கூடிய சில இசை கருவிகளை நீங்கள் பாருங்கள்.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
SynthStation49

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது உங்கள் ஐ பேட் மூலம் இயங்கும் இசைக் கருவியாகும் இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு வேண்டிய இசையை நீங்களே இசையமைத்து பழகலாம்...

iDJ Pro

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது டிஸ்க் ஜாக்கி எனப்படும். இதன் மூலம் உங்களது ஐ போனில் உள்ள அனைத்து பாடல்களையும் நாம் ரசித்திடலாம்.

iPB-10 Programmable Pedalboard

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது ஐ பேடில் இருந்து ஸ்பீக்கருக்கு கனெக்ட் செய்ய உதவும் அம்ப்ளிபயர் ஆகும்...

Piano Apprentice

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இந்த கருவியை ஐ பேட் உடன் இணைத்து நீங்கள் பியோனோ வாசிக்க கற்று கொள்ளலாம்..

Alesis iO Dock

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது உங்களுக்கு மிகத் துல்லியமான இசையை உங்களுக்கு தர உதவுகிறது..

MPC Fly 30

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது MIDI அப்ளிகேஷன் இயங்கக்கூடியது ஆகும்...

PocketLoops

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது ஐ போனில் இயங்கும் பியோனோ தான்....

MIDI Mobilizer 2

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது நீங்கள் பாட்டை பாடி அதற்கேற்ப இசையுடன் ரெக்கார்ட் செய்ய பயன்படுகின்றது இதன் மூலம் நீங்களே சொந்தமாக கம்போஸ் பண்ணலாம்..

Griffin GuitarConnect Pro

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது நீங்கள் இசைக்கும் இசையை ரெக்கார்ட் செய்ய பயன்படுகின்றது.

iRig Pro

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது உங்களது கித்தாருடன் இணைக்க பயன்படுகின்றது...

AmpKit LiNK HD

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது நீங்கள் இசைக்கும் இசையை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நீங்கள் மட்டும் ஹெட்போனில் கேட்க உதவுகிறது.

Sonoma GuitarJack

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது உங்களது கித்தாருடன் இணைத்து இசையை ரெக்கார்டு செய்ய உதவுகிறது.

iStomp

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இதில் நீங்கள் இசைக்கும் இசைகயை ரசிக்கலாம் மேலும் அதில் வேறு ஏதாவது சேர்க்க விரும்பினால் அதையும் செய்யலாம்.

iRiffPort

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது நீங்கள் கம்போஸ் செய்ய பயன்படுகின்றது

Mikey Digital

ஐ போனால் இயங்கும் இசைக்கருவிகள்!

இது நீங்கள் பதிவு செய்த இசையை மீண்டும் மாற்றி அமைக்க உதவுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot