அரங்கம் அதிர விடும் Apple.. 4 கேமரா, பழைய டச் ID, இ-சிம் ஆதரவுடன் புதிய iPhone.. எந்த மாடல்?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் (செப்டம்பர் 2025) அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், 4 கேமராக்களுடன் வரும் புதிய ஐபோன் மாடல் குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது. அது என்ன மாடல்? என்ன விலைக்கு வரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் (Apple's First Foldable Phone) ஆகும். இது ஐபோன் போல்ட் (iPhone Fold) என்று அழைக்கப்படலாம். புக்-ஸ்டைல் போல்டபிள் டிஸைனுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்த விவரங்கள் ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் (Bloomberg's Mark Gurman) வழியாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐபோன் போல்ட் கேமரா: மார்க் குர்மனின் கூற்றுப்படி ஐபோன் போல்ட் மாடலில் மொத்தம் 4 கேமராக்கள் இருக்கும். ஒன்று கவர் டிஸ்பிளேவில் இருக்கும்; இன்னொன்று இன்னார் மெயின் டிஸ்பிளேவில் இருக்கும் மற்றும் மீதமுள்ள 2 கேமராக்கள் பின்புறத்தில் இருக்கும். வெளிப்புறமாக எதிர்கொள்ளும் ப்ரைமரி கேமரா அதிக ரெசல்யூஷனை கொண்டிருக்கும். இரண்டாவது லென்ஸ் டெலிஃபோட்டோ அல்லது அல்ட்ராவைடு கேமராவாக இருக்கலாம்.
ஐபோன் போல்ட் டிஸ்பிளே: ஐபோன் போல்ட் ஆனது ஐபோன் 5-இன்ச் அல்லது 6-இன்ச் கவர் டிஸ்பிளேவுடன் வரலாம் மற்றும் பெரிய 8 இன்ச் இன்னர் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். மேலும் மார்க் குர்மனின் கூற்றுப்படி, சமீபத்திய ஐபோன் மாடல்கள் அந்த ஃபேஸ் ஐடியை நம்பியிருந்தாலும் கூட, ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டச் ஐடி ஆனது ஐபோன் போல்ட் வழியாக மீண்டும் கொண்டுவரப்படலாம்.
நினைவூட்டும் வண்ணம் டச் ஐடியுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் கீழ் கடைசியாக அறிமுகமான மாடல் - ஐபோன் எஸ்இ 2022 மாடல் ஆகும். ஐபோன் போல்ட் ஆனது ஸ்லிம் ஆன டிசனையும் பெறும். இது மூடியிருக்கும் போது சுமார் 9.5 மிமீ அளவுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக ஆப்பிள் இதில் "பருமனான" ட்ரூடெப்த் (TrueDepth) அமைப்பை சேர்க்க வாய்ப்பில்லை.
அதற்கு பதிலாக, விரைவாக மற்றும் வசதியாக அன்லாக் செய்ய, ஐபோன் போல்ட் மாடலின் பக்கவாட்டு பட்டனில் ஒரு டச் ஐடி சென்சார் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் 2026 ஆம் ஆண்டில் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் சி2 மோடத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சி1 மோடத்தை விட அதிக வேகத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
என்ன விலைக்கு வரும்? ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனின் விலை 1,999 அமெரிக்க டாலர்கள் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1.74 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்படலாம். இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் இருந்தால் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ .1 லட்சத்தை கூட எட்டலாம்.
ஐபோன் போல்ட் எப்போது அறிமுகமாகும்? இதுவரை ஆப்பிள் நிறுவனம் அதன் போல்டபிள் ஐபோன் குறித்து எந்த திட்டத்தையும் உறுதிப்படுத்தவில்லை என்பதால் நிச்சயம் இது ஐபோன் 17 சீரீஸ் உடன் சேர்ந்து (அடுத்த மாதம்) அறிமுகம் ஆகாது. மாறாக இது செப்டம்பர் 2026 இல் வெளியிடப்படலாம்
ஐபோன் ஆப்பிளின் புதிய ஏர் மாடல் எப்போது அறிமுகமாகும்? நீண்ட காலமாகவே பல லீக்ஸ்களில் சிக்கிவரும் ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது செப்டம்பர் 2025 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ஐபோன் 17 சீரிஸின் கீழ் உள்ள பிளஸ் மாடலுக்கு பதிலாக, மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த ஆண்டு வரும் ஐபோன் போல்ட் மாடலுக்கும் இந்த செப். 2025 இல் வரவுள்ள ஐபோன் 17 ஏர் மாடலுக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் - இந்த இரண்டுமே எந்த சிம் கார்டு ஸ்லாட்டுகள் இல்லாமல் வரும்; அதற்கு பதிலாக இசிம் (eSIM) வழியாக டூயல் சிம் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும்.


Click it and Unblock the Notifications








