Home
Mobile

இதை எத்தனை நடிகர், நடிகைகள் வாங்க போறாங்களோ.. சீனாவில் தயாராகும் 7.8-இன்ச் டிஸ்பிளே ஸ்பெஷல் ஐபோன்!

இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியா தளங்களில் - மிகவும் பரபரப்பாக உள்ள பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் கைகளில்.. லேட்டஸ்ட் ஆக அறிமுகமான "ஆரஞ்சு கலர்" ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மாடலை பார்க்க முடிகிறது!

"அதுக்குள்ள எப்படி வாங்குனீங்க?" என்கிற கேள்வியை கேட்பதற்குள்.. அதுக்குள்ள இன்னொரு புதிய ஐபோனின் அறிமுகம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது; அதுவும் சாதாரண ஐபோன் அல்ல. ரொம்பவே ஸ்பெஷல் ஆன ஐபோன்! என்ன மாடல்? எப்போது அறிமுகம்? இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

சீனாவில் தயாராகும் 7.8-இன்ச் டிஸ்பிளே ஸ்பெஷல் ஐபோன்!

ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல்கள் ஆன ஐபோன் 17 சீரிஸ் மற்றும் ஐபோன் ஏர் மாடல்களின் விற்பனைக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் ஆப்பிளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடல்களில் ஒன்றான ஐபோன் போல்ட் (iPhone Fold) பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை 2026 ஆம் ஆண்டில் ஐபோன் 18 சீரிஸுடன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஐபோன் போல்ட் ஆனது சமீபத்தில் அறிமுகமான மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் ஏர் மாடலில் இருந்து "நிறைய கடன் வாங்கக்கூடும்". அதாவது ஐபோன் ஏர் மாடலில் உள்ள டிசைன் மற்றும் அம்சங்கள் ஐபோன் போல்ட் மாடலிலும் இருக்கும் என்று அர்த்தம்.

ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஐபோன் போல்ட் ஆனது 2 ஐபோன் ஏர் மாடல்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஒரு கீல் மூலம் இணைப்பது போன்ற வடிவமைப்பை பெறலாம். அதாவது ஐபோன் போல்ட் ஆனது மிகவும் ஸ்லிம் ஆன வடிவமைப்பை பெறலாம்.

ஐபோன் ஏர் மாடல் ஆனது 5.6 மிமீ தடிமனை கொண்டுள்ளது. இதுதான் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் ஆகும். மேலும் டைட்டானியம் ஃபிரேம் உடன் கூடிய ஒரே புதிய ஐபோன் மாடலும் - ஐபோன் ஏர் மாடல் தான். இருப்பினும், ஐபோன் போல்ட் மாடலின் ஒருங்கிணைந்த தடிமன் 11.2 மிமீ ஆக இருக்கலாம் . இது 8.9 மிமீ தடிமன் கொண்ட சாம்சங் இசட் ஃபோல்ட் 7 மாடலை விட அதிகமாகும்

ஆக ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் அதன் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனை இன்னும் மெலிதாக மாற்ற முயற்சிக்கலாம். இம்மாத தொடக்கத்தில் ஐபோன் போல்ட் மாடலில் ஃபேஸ் ஐடி கைவிடப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியானது. இதன் மூலம் ஐபோன் போல்ட் மாடலின் தடிமன் சற்று குறைக்கப்படலாம். ஐபோன் போல்ட் மாடலில் 5.5 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே மற்றும் 7.8 இன்ச் இன்னர் டிஸ்பிளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் போல்ட் சீனாவில் தயாரிக்கப்படலாம்: கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்பிள்நிறுவனமானது இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகளவில் விரிவுபடுத்தியுள்ளது. அதாவது ஆப்பிள் இனி சீன தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை; இந்தியாவிலேயே பல உற்பத்தி வசதிகள் உள்ளன. இருப்பினும், ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, போல்டபிள் டிஸ்பிளேவுடன் வரும் ஐபோன் போல்ட் மாடல்கள் சீனாவில் "ஓரளவு" உற்பத்தி செய்யப்படலாம் என்கிறது.

ஐபோன் போல்ட் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? பொதுவாகவே போல்டபிள் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை மலிவானவை அல்ல. அதிலும் ஆப்பிள் தயாரிப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் ஆன ஐபோன் போல்ட் ஆனது அமெரிக்காவில் சுமார் $ 2,000 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,76,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக ஆப்பிள் நிறுவனமானது ரூ.1,74,999 க்கு வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி போல்ட் 7 (Samsung Z Fold 7) மாடலுக்கு எதிராக, நேரடி போட்டியாளரை களமிறக்க உள்ளது. இந்திய சந்தைக்கான ஐபோன் போல்ட் மாடலின் விலை அமெரிக்காவை விட அதிகமாக இருக்கலாம் (மற்ற ஐபோன்களை போலவே). முன்னரே குறிப்பிட்டபடி இது - ஐபோன் 18 சீரிஸ் உடன் சேர்த்து 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone Fold May Look Like 2 iPhone Air Models Joined By A Hinge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X