Home
Mobile

Samsung-க்கு குத்து.. Motorola-க்கு எத்து.. iPhone Flip மாடலை அறிமுகம் செய்யும் Apple.. எப்போது?

மறுபடியும் ஆப்பிளின் போல்டபிள் ஐபோன் (Apple Foldable iPhone) குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன. "ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் போல்டபிள் டிஸ்பிளே கொண்ட ஐபோனை அறிமுகம் செய்யவுள்ளது" என்கிற தகவல் நேற்றோ, இன்றோ வரும் புதிய தகவல் அல்ல. பல ஆண்டுகளாக வரும் அதே தகவல் தான்.

ஆனால் இம்முறை, அதாவது இந்தாண்டு உண்மையிலே ஆப்பிள் அதன் முதல் போல்டபிள் ஐபோனை அறிமுகம் செய்யலாம் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் ப்ளூம்பெர்க்கின் ஒரு சமீபத்திய அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் ஃபிளிப் ஐபோன் மாடல் ஒன்றை சோதிக்க தொடங்கியுள்ளது.

iPhone Flip மாடலை அறிமுகம் செய்யும் Apple.. எப்போது?

அதாவது ஐபோன் போல்ட் மாடலுடன் ஐபோன் பிளிப் (iPhone Flip) மாடலும் சோதனையில் உள்ளது. ஆக எதிர்காலத்தில், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மற்றும் மோட்டோரோலா ரேஸர் 60 போன்ற ஃபிளிப்-ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்போனை அறிமுகப்படுத்த்தும் திட்டமும் ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ளது போல் தெரிகிறது

ஆனால் ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டு, மார்க்கெட்டில் அதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே பிளிப் ஸ்டைல் ஐபோனின் அறிமுகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . பிளிப் ஐபோனின் சோதனை கட்டம் பற்றிய விவரங்கள் குறைவாகவே இருந்தாலும், இத்தகைய முன்மாதிரிகளின் இருப்பு ஆனது, ஆப்பிள் அதன் போல்டபிள் உத்தியை இறுதி செய்வதற்கு முன்பு பல திசைகளை கவனமாக மதிப்பீடு செய்வதை குறிக்கிறது.

ஐபோன் ஃபிளிப் மாடலுக்கான ஆரம்பகால சாத்தியமான லான்ச் விண்டோ ஆனது 2027 ஆம் ஆண்டளவில் இருக்கலாம் என்று தொழில்துறை ஊகங்கள் சுட்டிக்காட்டுகின்றன, இருப்பினும் தொழில்நுட்ப தயார்நிலை மற்றும் நுகர்வோர் தேவையைப் பொறுத்து இந்த லான்ச் டைம்லைன் -முன்னோக்கி அல்லது பின்நோக்கோ நகரலாம்.

முன்னதாக ஃப்ரண்ட் பேஜ் டெக் (FrontPageTech) என்கிற யூட்யூப் சேனலில் ஐபோன் போல்ட் என்று கூறப்படும் ஒரு ஒரு போல்டபிள் ஸ்மார்ட்போனின் சிஏடி ரெண்டர்கள் வெளிப்படுத்தப்பட்டதும் இங்கே குறிப்பிடததக்கது. அந்த வீடியோவின்படி, ஐபோன் ஃபோல்ட் ஆனது ஒரு பெரிய இன்னர் டிஸ்பிளே மற்றும் ஒரு சிறிய எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

அதாவது இது கூகுள் பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை போலவே இருக்கிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் கூகுளை மட்டுமே "காப்பி அடித்தது போல்" தெரியவில்லை. டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸின் சமீபத்திய அறிக்கை - இந்த போல்டபிள் ஐபோனுக்கும், "கூறப்படும்" சாம்சங் கேலக்ஸி வைட் ஃபோல்டை போல இருக்கிறது என்றும் கூறுகிறது.

ஃப்ரண்ட் பேஜ் டெக் வீடியோவில் காட்சிப்படுத்தப்படும் ஐபோன் ஃபோல்ட் ஆனது 5.5 இன்ச் அளவிலான வெளிப்புற டிஸ்பிளே மற்றும் 7.8 இன்ச் உள்பக்க டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக தெரிகிறது. ஒப்பிடுகையில், சாம்சங் வைட் ஃபோல்டில் 5.35 இன்ச் இன்னர் டிஸ்பிளே மற்றும் 7.58 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் ஆனது மடிக்கும்போது 9 மிமீ தடிமனையும் விரிக்கும்போது 4.5 மிமீ தடிமனையும் அளவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மாடலின் 8.9 மிமீ (மடிக்கப்பட்ட) மற்றும் 4.2 மிமீ (மடிக்கப்பட்ட) தடிமனை போன்றது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் ஐபோன் ஃபோல் ஆனது பிக்சல் ஃபோல்ட்-ஐ விட கணிசமாக ஸ்லிம் ஆன மாடலாக ஆக்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் ஃபோல்டில் டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் டூயல் செல்பீ ஷூட்டர்கள் இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளது. இந்த மாடல் ஆப்பிளின் தனியுரிம சி2 மோடத்துடன் இணைக்கப்பட்ட 2என்எம் ஏ20 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக இது டச் ஐடியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது பவர் பட்டனில் ஒருங்கிணைக்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone Flip Reportedly Under Development It Seems Apple Testing Both Foldable and flip style iPhones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X