Home
Mobile

தலை சுற்றும் விலை.. ரூ.4,49,900-க்கு iPhone Duo அறிமுகம்.. எந்தெந்த மாடல்கள்? என்னென்ன விலை?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் டியோ, ஐபோன் 18 ப்ரோ சீரிஸ், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 உள்ளிட்ட மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக ஐபோன் டியோவின் 2 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.4,49,990ஆக இருப்பது, ஸ்மார்ட்போன் மார்கெட்டை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

ஐபோன் டியோ விலை, விற்பனை (iPhone Duo Price, Sale): 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,99,900 ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.3,24,900 ஆகவும் இருக்கிறது. மேலும், 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.3,74,900 ஆகவும், 2 டிபி மெமரி வேரியண்டடின் விலை ரூ.4,49,900 ஆகவும் இருக்கிறது.

தலை சுற்றும் விலை.. ரூ.4,49,900-க்கு iPhone Duo அறிமுகம்.. என்ன விலை?

ஸ்டார் ஒயிட் (Star White) மற்றும் நைட் ஸ்கை (Night Sky) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோரில் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அக்டோபர் 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 70 நாடுகளில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஐபோன் 18 ப்ரோ விலை, விற்பனை (iPhone 18 Pro Price, Sale): 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,64,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,89,900 ஆகவும் இருக்கிறது. 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,39,900 ஆகவும், 2 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை விலை ரூ.3,14,900ஆகவும் இருக்கிறது.

பிளாக் (Black), சில்வர் (Silver), கிளாசியர் (Glacier) மற்றும் மற்றும் பர்கண்டி (Burgundy) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதே கலர் மற்றும் தேதிகளில் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடலும் கிடைக்க இருக்கிறது.

தலை சுற்றும் விலை.. ரூ.4,49,900-க்கு iPhone Duo அறிமுகம்.. என்ன விலை?

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை, விற்பனை (iPhone 18 Pro Max Price, Sale): 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,79,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,04,900 ஆகவும் இருக்கிறது. 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,54,900 ஆகவும், 2 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை விலை ரூ.3,29,900ஆகவும் இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4, விற்பனை (Apple Watch Ultra 4 Price, Sale): அல்பைன் லூப், டிரெயில் லூப் மற்றும் ஓசன் பேண்ட் வெர்ஷன்களின் விலை ரூ.1,09,900ஆக இருக்கிறது. டைட்டானியம் மிலானீஸ் லூப் வெர்ஷனின் விலை ரூ. 1,24,900 ஆக இருக்கிறது. இப்போது, ப்ரீ-ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 விலை, விற்பனை (Apple AirPods 5 Price, Sale): இந்தியாவில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 மாடலின் விலை ரூ.14,900ஆக இருக்கிறது. அதுவே வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மாடலின் விலை ரூ.17,900 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iPhone Duo iPhone 18 Pro iPhone 18 Pro Max Apple Watch Ultra 4 And Apple AirPods 5 Prices in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X