சர்ர்னு விலை குறைந்த ஸ்லிம் iPhone.. ரூ.7000, ரூ.8000 இல்ல அதுக்கும் மேல.. செம்ம டிமாண்ட் ஆகும் 5.6மிமீ போன்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்களுடன் சேர்ந்து அறிமுகமான ஆப்பிளின் ஸ்லிம் ஐபோன் (Slim iPhone) ஆன ஐபோன் ஏர் (iPhone Air ) மாடலின் இந்திய விலை நிர்ணயம் சர்ரென்று சரிந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தால் மிகவும் நேர்த்தியாக வடிவைக்கப்பட்டதாக கூறப்படும் புதிய ஐபோன் ஏர் மாடலின் மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தும், அதிக விலை நிர்ணயம் காரணமாக இந்நாள் வரையிலாக அதை வாங்காமல் இருந்தால்.. இப்போது வாங்கலாம். ஆன்லைன் வலைத்தளங்களில் நடந்துகொண்டிருக்கும் பிளாக் ஃப்ரைடே விற்பனையின் ஒரு பகுதியாக ஐபோன் ஏர் ஆனது கணிசமான விலை குறைப்பை பெற்றுள்ளது.

அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், எந்த பேங்க் ஆபர் அல்லது கார்டு டிஸ்கவுன்ட்டும் இல்லாமல் நேரடியாக ரூ.10,000 விலை குறைப்பை பெற்று ரூ.1,09,900 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.1,19,900 க்கு அறிமுகமானது. இதே ஆப்ஷன் பிளிப்கார்ட்டில் ரூ.1,14,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது
ஆப்பிள் ஐபோன் 17 ஏர் மாடலின் விரிவான அம்சங்கள்: பெயர் குறிப்பிடுவது போலவே ஐபோன் ஏர் என்பது ஆப்பிளின் அல்ட்ரா ஸ்லிம் (Ultra Slim) மாடல் ஆகும். கூடவே இசிம்-ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை (eSIM Support) மட்டுமே கொண்டிருக்கும்.
ஐபோன் ஏர் ஆனது இதுவரை வெளியானதிலேயே மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் மாடல் ஆகும், அளவீட்டில் இது வெறும் 5.6மிமீ மட்டுமே உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. மேலும் இது 80% மறுசுழற்சி செய்யப்பட்ட டைட்டானியம் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன் மற்றும் பின்புறத்தில் செராமிக் ஷீல்ட் 2 ப்ரொடெக்ஷனும் உள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.5 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை (Retina XDR OLED) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேயில் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion), 10-120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆகிய அம்சங்களுக்கான ஆதரவும் உள்ளன.
சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் ஏர் மாடல் ஆனது ஏ19 ப்ரோ சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவுடனும் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் ப்ரைமரி கேமரா உள்ளது.
சிங்கிள் ரியர் கேமராவை கொண்டிருந்தாலும் கூட இது சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ திறன்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை - இது "நாள் முழுவதும்" பேட்டரி லைஃப்பை வழங்குவதாகவும், ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மெங்கும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.
ஐபோன் 17 விலை உயரலாம்: டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஐபோன் 17 மாடலின் அனைத்து எஸ்கேயு-க்களின் (SKU) விலையையும் உயர்த்தக்கூடும். ஐபோன் 17 மாடலுக்கான அதிக தேவை மற்றும் குறைவான ஸ்டாக் இருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குய்ப்பிட்டுளார்.
யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடலின் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆப்ஷன்கள் ரூ.7,000 வரை விலை உயர்வை காணலாம். இது துல்லியமாக மாறினால், இரண்டு எஸ்கேயு-க்களின் திருத்தப்பட்ட விலையும் ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 ஆக அதிகரிக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஐபோன் 17 மாடலின் வெளியீட்டு விலை - 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய பேஸிக் ஆப்ஷன் ரூ.82,900 க்கு அறிமுகமானது. ஐபோன் 17 மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கு அறிமுகமானது.


Click it and Unblock the Notifications








