தலைவன் வேற ரகம்.. 48MP டூயல் கேமராவுடன் iPhone Air 2.. பேட்டரியும் பெருசு.. எப்போதும் வரும்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக வெளியாகிய ஐபோன் ஏர் (iPhone Air) மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மாடல் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. கேமரா மற்றும் பேட்டரியில் அப்கிரேட் இருக்கிறது.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐபோன் ஏர் வெளியாகியது. இதனால், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஐபோன் ஏர் 2 எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஸ்மார்ட்போன் குறித்த எந்த தகவலும் வெளியாகாததால், அது மார்கெட்டுக்கு வருமா அல்லது வராதா என்ற சந்தேகம் ஐபோன் பிரியர்களிடையே இருந்தது.

இப்போது, முக்கிய பீச்சர்கள் கசிந்து சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. இதை வைத்து பார்க்கும்போது, முந்தைய மாடலான ஐபோன் ஏர் மாடலில் இருந்து கேமரா மற்றும் பேட்டரியில் அப்கிரேட் இருப்பது தெரிகிறது. ஆகவே, அதை விட ஸ்லிம்மாக இருக்குமா என்பது தெரியவில்லை.
ஐபோன் ஏர் 12 அம்சங்கள் (iPhone Air 2 Specifications): டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்த பீச்சர்களின்படி 6.55 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K+ ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிபிஓ பேனல் கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் ஏ20 சீரிஸ் சிப்செட் கிடைக்க இருக்கிறது. 2 என்எம் ப்ராசஸ் வர இருக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரையில், 3500mAh கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆகவே, இது முந்தைய மாடலை விட கூடுதல் பேக்கப் கொடுக்கும். கேமராவில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே கிடைத்தது. ஆகவே, இதில் அப்கிரேட் இருக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கும்.
கூடுதலாக அல்ட்ரா வைடு கேமராவை எதிர்பார்க்கலாம். வழக்கம்போல இதில் பேஸ் ஐடி உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கும். இந்த ஐபோன் ஏர் 2 ஸ்மார்ட்போன் இந்த வருடம் வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ ஸ்மார்ட்போன்கள் 2027ஆம் ஆண்டில் வெளியாக இருக்கின்றன. அதோடு இதை எதிர்பார்க்கலாம்.
முன்னதாக வெளியான ஐபோன் ஏர் மாடலில் 6.5 இன்ச் (2736 x 1260 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, ப்ரோமோஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 300 நிட்ஸ் பீக் அவுட்டோர் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
எச்டிஆர், ட்ரூ டோன் மற்றும் செராமிக் ஷீல்டு 2 புரொடெக்சன் கிடைக்கிறது. சிக்ஸ் கோர் ஏ19 ப்ரோ சிப்செட் கிடைக்கிறது. ஐஓஎஸ் 26 (iOS 26) கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 48 எம்பி சிங்கிள் ரியர் கேமரா உள்ளது. இதில் சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.
18 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5.64 எம்எம் தடிமன் மற்றும் 165 கிராம் எடை உள்ளது. பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி கிடைக்கிறது. 27 மணி நேர வீடியோ பிளேபேக் கொடுக்கிறது. இந்தியாவில் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 1,19,900ஆக இருந்தது. ஆகவே, ஐபோன் ஏர் 2 மாடலை அதைவிட கூடுதல் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
