Home
Mobile

வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி.. Apple-ன் புது ஸ்லிம் iPhone.. டூயல் கேமரா, நல்ல பேட்டரி லைஃப் உடன்!

ஆஹா ஓஹோ என்கிற பில்டப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிளின் ஸ்லிம்மஸ்ட் ஐபோன் (Apple's Slimmest iPhone ) மாடல் ஆன ஐபோன் ஏர் (iPhone Air), எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் ஆகவும் இல்லை, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும் ஆப்பிள் நிறுவனமானது தனது அல்ட்ரா ஸ்லிம் ஐபோன் சோதனையை இதோடு முடித்துவிட போவதில்லை என்பது போல் தெரிகிறது. ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் வி62 என்ற உள் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இரண்டாம் தலைமுறை ஐபோன் ஏர்-இன் முன்மாதிரிகளை ஏற்கெனவே சோதித்து வருவதாகவும், 2027-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிகிறது.

Apple-ன் புது ஸ்லிம் iPhone.. டூயல் கேமரா, நல்ல பேட்டரி லைஃப் உடன்!

பெரும்பாலும் அது ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மாடலாக இருக்கலாம். இது பிளாக்ஷிப் ஐபோன் 18 ப்ரோ சீரீஸூடன் அல்லாமல், அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் வஸ்டாண்டர்ட் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18 இ மாடல்களுடன் சேர்ந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. மிக முக்கியமாக, முதல் ஐபோன் ஏர் குறித்த இரண்டு பெரிய புகார்களான கேமராவின் பன்முகத்தன்மை மற்றும் பேட்டரி லைஃப் ஆகியவற்றைச் சரிசெய்வதில் ஆப்பிள் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

ஐபோன் ஏர் 2 மாடலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: அறிக்கையின்படி, ஐபோன் ஏர் 2 மாடலில் இரண்டாவது ரியர் கேமரா இடம்பெறலாம் என்றும், இது அல்ட்ரா-வைட் (ultra-wide) கேமராவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாடலில் இருந்த சிங்கிள் கேமரா சிஸ்டம், குறிப்பாக அதன் அதிக விலையை கருத்தில் கொள்ளும்போது, ​​அதிகம் விமர்சிக்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக இருந்தது.

கேமராவுடன் சேர்த்து ஐபோன் ஏர் 2 மாடலில் பேட்டரி திறனும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. ஆப்பிள் நிறுவனம் பெரிய பேட்டரியை பொருத்தலாம் அல்லது அதிக திறன் கொண்ட சிப்செட் மற்றும் மேம்பட்ட உள் வடிவமைப்பை சார்ந்திருக்கலாம். ஆப்பிள் நிறுவனம் இன்னமும் அல்ட்ரா ஸ்லிம் வடிவமைப்பை தக்கவைக்க திட்டமிட்டுள்ளதால், பெரிய பேட்டரியை நாம் எதிர்பார்க்க முடியாது; மாறாக செயல்திறன் மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்.

கிஸ்பாட்டின் கருத்து: முன்னரே குறிப்பிட்டப்படி, ஆப்பிளின் முதல் ஐபோன் ஏர் மாடலானது அதன் மெல்லிய வடிவமைப்பிற்காக பெரும் கவனத்தை ஈர்த்தாலும், வலுவான விற்பனையை அடைவதில் சிரமப்பட்டது. அதன் எடை குறைந்த வடிவமைப்பு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி குறித்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதன் விளைவாக ஹார்ட்வேர் அடிப்படையில் குறைவான சமரசங்களை கொண்ட ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ மாடல் ஐபோன்களையே பல வாடிக்கையாளர்கள் விரும்பினர்.

ஐபோன் ஏர் 2 மாடலில் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் பேட்டரி திறன் ஆகியவை நடைமுறை சிக்கல்களை தீர்த்தாலும், இறுதியில் அதன் விலை நிர்ணயமே அந்த மாடலின் வெற்றியை தீர்மானிக்கக்கூடும். ஆப்பிளின் முதல் ஐபோன் ஏர் மாடலானது இந்தியாவில் ரூ.1.19 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ப்ரோ மாடல்களை விட குறைவான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இது 'பிரீமியம் ஃபிளாக்ஷிப்' (premium flagship) வகையிலேயே இடம் பிடித்திருந்தது.

ஒருவேளை ஐபோன் ஏர் 2 மாடலின் விலையை உயர்த்தாமல் - பேட்டரி மற்றும் கேமரா திறனை ஆப்பிள் மேம்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் மாடலை பரிந்துரைப்பது மிகவும் எளிதாக இருக்கும். இருப்பினும், கூடுதல் ஹார்ட்வேர்களுடன் விலையும் உயர்ந்தால், சாம்சங் (Samsung) மற்றும் ஒப்போ (OPPO) போன்ற நிறுவனங்களின் - இன்னும் சிறந்த அம்சங்கள் கொண்ட - ஸ்லிம் ஆன ஃபிளாக்ஷிப் போன்களே வாடிக்கையாளர்கள் ஈர்க்கும்; ஐபோன் ஏர் 2 மாடல் மீண்டும் புறக்கணிக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
iPhone Air 2 Tipped to Launch With Dual Camera Improved Battery Life Seems Apple is Not Stopping Slim iPhones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X