Home
Mobile

Apple அடிபணிந்தது.. கம்மி விலைக்கு 48MP + 48MP கேமரா, A20 சிப், ஸ்லிம் டிசைனில் புது iPhone.. எந்த மாடல்?

ஒரிஜினல் ஐபோன் ஏர் (Original iPhone Air) மாடலின் அடுத்தகட்ட மாடலாக, ஸ்லிம் டிசைனை கொண்ட ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மாடலின் லான்ச் டைம்லைன், அம்சங்கள் மற்றும் விலை குறித்த சில சுவாரசியமான தகவல்கள் - வெளியாகியுள்ளது.

கேமரா அப்கிரேட்: டிப்ஸ்டர் லான்ஸக் (Lanzuk) என்பவர் கொரிய தளமான நேவரில் (Naver) வெளியிட்டு உள்ள, சமீபத்திய பதிவின் படி, ஆப்பிளின் ஐபோன் ஏர் 2 மாடலில் தலா 48 மெகாபிக்சல் திறன் கொண்ட சென்சார்களை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும்.

48MP + 48MP கேமரா, A20 சிப், ஸ்லிம் டிசைனில் புது iPhone.. எந்த மாடல்?

சிங்கிள் 48 மெகாபிக்சல் ரியர் சென்சாரை கொண்டுள்ள தற்போதைய ஐபோன் ஏர் மாடலுடன் ஒப்பிடுகையில், இது ஒரு குறிப்பிடத்தக்க அப்கிரேட் ஆக அமையும். மேலும் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான விலைக்கு அறிமுகமான ஐபோன் ஏர் மாடலில், எடுத்ததுமே சொல்லப்பட்ட முதல் மற்றும் முக்கிய குறையும் - சிங்கிள் ரியர் கேமரா தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

சிப்செட் டிகிரேட்: சிங்கிள் ரியர் கேமரா செட்டப் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப் ஆக அப்கிரேட் ஆகி இருந்தாலும், ஐபோன் ஏர் 2 மாடலின், சிப்செட் செயல்திறனில் ஒரு சமரசம் (அதாவது குறைவான திறன்) இருக்கலாம் என்பதையும் சமீபத்திய லீக் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மாடல்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஏ20 ப்ரோ சிப்பிற்கு பதிலாக, ஐபோன் ஏர் 2 மாடலில், ஆப்பிளின் சாதாரண ஏ20 சிப் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் (Foldable iPhone) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் அல்ட்ராவில் (iPhone Ultra) ஏ20 ப்ரோ சிப் பயன்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆப்பிளின் ஏ20 சிப் ஆனது 2என்எம் தொழில்நுட்ப செயல்முறையின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாக நம்பப்படுகிறது

ஐபோன் ஏர் 2 மாடல் மட்டுமின்றி, ஸ்டாண்டர்ட் ஐபோன் 18 மாடலிலும் கூட அதே ஏ20 சிப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு, ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மாடல்களில் பயன்படுத்தப்பட்ட அதே ஏ19 ப்ரோ சிப்செட்டை தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் ஏர் மாடலிலும் பயன்படுத்தியிருந்தது.

ஐபோன் ஏர் 2 மாடலுக்கு ஏ20 சிப்பை தேர்ந்தெடுப்பதற்கான முடிவு, அதிகரித்து வரும் உதிரிபாகங்களின் விலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஏ20 சிப்பைப் பயன்படுத்துவது ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி செலவை குறைக்க உதவக்கூடும்; குறிப்பாக TSMC-யின் அடுத்த தலைமுறை 2என்எம் தொழில்நுட்ப செயல்முறையுடன் தொடர்புடைய உற்பத்தி செலவுகளைக் குறைக்க இது உதவும். ஆக ஐபோன் ஏர் 2 மாடலின் விலையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

எப்போது அறிமுகமாகும்? ஆப்பிளின் ஐபோன் ஏர் 2 மற்றும் ஐபோன் 18 ஆகிய 2 மாடல்களும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறியாதோர்களுக்கு, ஆப்பிள் அதன் தயாரிப்புகளின் அறிமுகத்தில் சில மாற்றங்களை செய்யும் என்றும், இந்தாண்டு போல்ட் மாடலையும், ப்ரோ மாடல்களையும், அடுத்த ஆண்டு மலிவான விலை கொண்ட மாடல்களையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
iPhone Air 2 Tipped to get Two 48MP Cameras But With Chip Downgrade When it Will Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X