இதுதான் புது iPhone.. 48எம்பி கேமரா.. ஏ20 ப்ரோ சிப்செட்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ஆப்பிள் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மாடலை உருவாக்கி வருகிறது. அதாவது இந்த போன் வரும் 2026-ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஐபோன் ஏர் 2 மாடலின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
முந்தை ஆப்பிள் ஐபோன் ஏர் மாடல் போன்று இல்லாமல் ஆப்பிள் ஐபோன் ஏர் 2 ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளியாகும். அதேபோல் இந்த போன் மெல்லிய வடிவமைப்புடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் ஏர் 2 அம்சங்கள் (iPhone Air 2 Specifications): 48எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஐபோன் ஏர் 2 மாடல். எனவே இந்த போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 18எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6.5-இன்ச் ஹை ரெஃரெஷ் ரேட் ஆதரவுடன் ஆப்பிள் ஐபோன் ஏர் 2 மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் 3D ஃபேஸ் ரெகக்னிஷன் (face recognition) அம்சத்துடன் இந்த ஐபோன் மாடல் அறிமுகமாகும்.
ஏ20 அல்லது ஏ20 ப்ரோ சிப்கள் உடன் இந்த புதிய ஐபோன் ஏர் 2 மாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஏர் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் ஏர் அம்சங்கள் (iPhone Air Specifications): 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 2736 x 1260 பிக்சல்ஸ், 10-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஐபோன் ஏர் மாடல் ஆனது ஏ19 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது, இதில் 5-கோர் சிபியு, நியூரல் எஞ்சின் ஆகியவைகள் அடங்கும். மேலும் 6 கோர் பிராசரஸ் வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இது சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ திறன்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது.
இந்த ஐபோன் ஏர் மாடல் ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஐபோன் ஏர் மாடல் ரூ.1,19,900-விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








