Home
Mobile

Apple அப்படி வா வழிக்கு.. பெரிய பேட்டரி, 48MP டூயல் கேமராவுடன் புது ஸ்லிம் iPhone.. எந்த மாடல்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் மாடலாக அறிமுகமான ஐபோன் ஏர் (iPhone Air)ஆனது எதிர்பார்த்த அளவிலான வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை என்பதால்.. "இந்த முறை மிஸ் ஆகாது" என்கிற, ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மாடலில் பல அட்டகாசமான அப்கிரேட்களை செய்துள்ளது போல் தெரிகிறது.

பர்ஸ்ட் ஜெனரேஷன் மாடல் (ஐபோன் ஏர்) ஆனது அதன் தனித்துவமான வடிவமைப்பால் பிரபலமடைந்தாலும், ஒப்பீட்டளவில் சிறிய பேட்டரி மற்றும் சிங்கிள் ரியர் கேமரா செட்டப் ஆகியவற்றிற்காக விமர்சனங்களை சந்தித்தது. ஐபோன் ஏர் 2 மாடலில், ஆப்பிள் இந்த குறைபாடுகளை சரிசெய்யும் என்று கூறப்படுகிறது. அதாவது வரவிருக்கும் இந்த ஐபோனில் பெரிய பேட்டரி மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய பேட்டரி, 48MP டூயல் கேமராவுடன் புது ஸ்லிம் iPhone.. எந்த மாடல்?

ஐபோன் ஏர் 2 மாடலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: விநியோக சங்கிலி வட்டாரங்களை மேற்கோள் காட்டி, டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த விவரங்களின்படி, ஐபோன் ஏர் 2 மாடலில் 3500mAh பேட்டரி இருக்கும் என்று கூறுகிறது. இது 3149mAh பேட்டரியை கொண்டிருந்த ஐபோன் ஏர் மாடலை விட நல்ல அப்கிரேடாகும்

இந்த தகவல் உண்மையாக இருந்தால், பேட்டரி பயன்பாட்டு நேரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் மற்றும் பிற ஐபோன் மாடல்களுக்கு இடையிலான வன்பொருள் (hardware) இடைவெளி குறையும். மேலும், ஐபோன் ஏர் 2 மாடல் ஆனது 2என்எம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏ20 சிப் மூலம் இயங்கும் என்றும் வெளியான லீக் தெரிவிக்கிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் (refresh rate) கூடிய 6.55-இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த ஐபோன் 3டி பேஸ் ரிகக்னைசேஷன் வசதியை ஆதரிக்கும் என்றும் தெரிகிறது.

ஐபோன் ஏர்2 மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கும் என்றும், அதில் 48-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் டூயல்-லென்ஸ் கேமரா ஆகியவை அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் 48-மெகாபிக்சல் ரியர் சென்சார் கொண்ட தற்போதைய மாடலை விட இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடாக அமையும்.

எப்போது அறிமுகம்? ஆப்பிள் நிறுவனம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பேஸிக் ஐபோன் 18 (iPhone 18) மாடலுடன் சேர்த்து ஐபோன் ஏர் 2 மாடலை அறிமுகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதாவது ஐபோன் ஏர் மாடல் அறிமுகமான டைம்லைன் (2205 செப்டம்பர்) உடன் இதன் அறிமுகம் ஒத்துப்போகாது.

ஐபோன் ஏர் என்ன விலைக்கு அறிமுகமானது? ஆப்பிளின் முதல் ஐபோன் ஏர் மாடல் ஆனது 4 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டது: ஸ்கை ப்ளூ, லைட் கோல்ட், கிளவுட் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் பிளாக். இந்தியாவில் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.1,19,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்ததாக உள்ள 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 1டிபி ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

ஐபோன் ஏர் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடல் மட்டுமல்ல; ஒரு இசிம்-ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை மட்டுமே கொண்டிருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது அதாவது மற்ற ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை போலவே, ஐபோன் ஏர் மாடலும் பயன்பாட்டை பொறுத்து 10-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதங்களுக்கு இடையில் இயங்க முடியும். ஐபோன் ஏர் ஆனது இன்றுவரை அதன் மிக மெல்லிய ஐபோன் மாடல் என்றும், அளவீட்டில் 5.6மிமீ உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone Air 2 Tipped to pack 3500mAh Battery and 48MP Dual Rear Camera Setup Check Out Apple New Launch Timeline
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X