நீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.!

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஐபோன் 9

இந்நிலையில் ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்இ2 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இந்த ஆண்டு துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 ஏப்ரல் 5-ம் தேதி

ஏப்ரல் 5-ம் தேதி

அந்த வகையில் தற்சமய் வெளியாகி இருக்கும் தகவல்களின் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2 மாடலை வரும் ஏப்ரல்5-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

செவிலியருக்கு வந்த கொரோனா., செல்போன் தான் காரணம்- எப்படி தெரியுமா?செவிலியருக்கு வந்த கொரோனா., செல்போன் தான் காரணம்- எப்படி தெரியுமா?

ஐபோன் கேஸ்

அன்மையில் ஐபோன் எஸ்இ2 மாடலுக்கான கேஸ் புகைப்டங்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன, 2016 ஐபோன் எஸ்இ போன்றே புதிய ஐபோன் 9 மாடலின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய ஐபோன் கேஸ் புகைப்படத்தில் அர்பன் ஆர்மர் கியர் பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

 ஐபோன் 4.7-இன்ச்

மேலும் சிவப்பு நிறு கேஸ் எக்சோ-ஸ்கெலிட்டன் அல்லது லெதர் கேசுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஃபிரேம் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த கேஸ் வலது புற ஓரத்தில் கேமரா கட்-அவுட் காணப்படுகிறது. இதன் பேக்கேஜிங்கில் புதிய ஐபோன் 4.7-இன்ச், 2020 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மிலிட்டரி ஸ்டாண்டர்டு பிராண்டிங்

அதன்படி இதன் ஸ்கிரீன் அளவை வைத்தே இது ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்இ2 என கூறப்படுகிறது. மேலும் ஐபோன்கேஸ் புகைப்படத்தில் மிலிட்டரி ஸ்டாண்டர்டு பிராண்டிங் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெஸ்ட் பை மற்றும் இதர முன்னணி விற்பனையாளர்களுக்கு புதிய கேஸ் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

டச் ஐடி ஹோம் பட்டன்

டச் ஐடி ஹோம் பட்டன்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐபோன் 9 மாடலில் 4.7-இன்ச் எல்சிடி பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13பயோனிக் சிப்செட், 3ஜிபி ரேம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

399 டாலர்கள்

குறிப்பாக இந்த புதிய ஐபோன் மாடல் 399 டாலர்கள் விலையில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது,இந்திய மதிப்பில் ரூ.30,000 வரை நிர்ணயம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 9 aka iPhone SE 2 Cases Arrive at Retailers, Tipping Launch Date of April 5: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X