முதல் முறையாக ஐஓஎஸ் 11-இல் இயங்கும் ஐபோன் 8 லீக்ஸ்.!

|

ஐபோன் 8 ரெண்டர்ஸ் கசிந்துள்ளன. ஆனால் இன்றைய கசிவு முதல் முறையாக புதிதாக அறிவிக்கப்பட்ட ஐஓஎஸ் 11-இல் இயங்கும் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக ஐஓஎஸ் 11-இல் இயங்கும் ஐபோன் 8 லீக்ஸ்.!

இந்த தகவலில் சமீபத்திய கண்ட்ரோல் சென்டர், லாக் ஸ்க்ரீன், ஆப்பிள் ம்யூசிக் மற்றும் நியூஸ் பயன்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஐபோன் 8 வதந்திகளின்கீழ் பெஸல்லேஸ் டிஸ்பிளேவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லீக்ஸ் ஆனது ஐபோன் 8 சாதனத்தை வேறுபட்ட கோணங்களிலிருந்தும் காட்டுகிறது.

ஐடிராப்நியூஸ் (IDropNews) வழங்கியுள்ள இந்த புதிய தகவல் முதலில் வடிவமைப்பைப் பற்றி பேசுகிறது, முன்னால் முகப்பு பட்டன் இல்லாத உளிச்சாயும்-குறைவான வடிவமைப்பு மற்றும் இயர்பீஸ் (earpiece) மற்றும் முன் கேமரா சென்சார் வைக்க மேல் விளிம்பில் ஒரு சிறிய லிப் ஆகியவைகளை வெளிப்படுத்துகிறது.

முதல் முறையாக ஐஓஎஸ் 11-இல் இயங்கும் ஐபோன் 8 லீக்ஸ்.!

மேலும் இந்த அறிக்கை ஐபோன் 8 பேஸ் டிடெக்ஷன் திறன்களை கொண்ட ஒரு முன் லேசர் மற்றும் அகச்சிவப்பு சென்சார் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. டச் ஐடியைப் பொறுத்தவரை, இது காட்சிக்கு கீழே உட்பொதிக்கப்படுவதாக அறிக்கை விவரிக்கிறது.

மேலும் ஐபோன் 8 வயர்லெஸ் சார்ஜிங் திறன்களை அறிமுகப்படுத்த உள்ளே ஒரு பெரிய பேட் உட்பொதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறம், ஏஆர் அம்சங்கள் மற்றும் செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பை நாங்கள் காண்கிறோம். ஆப்பிள் கிட்டத்தட்ட ஐபோன் 8 கருவியில் ஏஆர் அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது இஓஎஸ் 11 உடன் வெளியிடப்பட்ட ஏஆர்கிட் (ARKit) அம்சம் இதற்கு பின்புலமாய் திகழும்.

ஐபோன் 8 கருவியின் வெளியீட்டுத் தேதி, உற்பத்தி சிக்கல்களின் காரணமாக தாமதமாகும் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் இக்கருவி செப்டம்பரில் கால அட்டவணையில் துவங்கப்படும் என்றும் சில வதந்திகள் கூறி வருகின்றன. இதெல்லாம் ஒருபக்கமிருக்க ஆப்பிள் ஒரு ஓஎல்இடி டிஸ்பிளே, ஒரு ஆப்பிள் ஏ11 சிப், மற்றும் ஒரு 3டி முனபக்க கேமரா ஒருங்கிணைத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 8 Running on iOS 11 Leaked in Renders for the First Time. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X