நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

ஆஹா ஓஹோ என்று புகழ்ப்படும் அளவிலாக அடுத்த ஐபோன் கருவிகளில் அம்சங்கள் இணைக்கப்பட காரணமாக அதிரடியான நோக்கியா அக்கருவிகளின் வருகையும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

|

பல வதந்திகளின்படி ஆப்பிள் நிறுவனம் ஒரு பத்தாம் ஆண்டு விழா ஐபோன் பதிப்புடன் சேர்த்து இந்தாண்டில் மொத்தம் மூன்று ஐபோன் கருவிகளை வெளியிடும் என்று குறிப்பிடுகின்றன. அதில் ஒன்று ஐபோன் 8 அல்லது ஐபோன் எக்ஸ் கருவியாக இருக்கலாம் மற்றும் வடிவமைப்பு, அம்சங்கள் அடிப்படையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

இப்படியாக, ஆஹா ஓஹோ என்று புகழ்ப்படும் அளவிலாக அடுத்த ஐபோன் கருவிகளில் அம்சங்கள் இணைக்கப்பட காரணமாக அதிரடியான நோக்கியா அக்கருவிகளின் வருகையும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது அதெல்லாம் சரி அப்படி என்னதான் இருக்கிறது. தெரிந்தால் நாங்களும் கொஞ்சம் புகழுவோமே என்பது உங்கள் கூற்றென்றால் இதோ லீக்ஸ் தகவல்கள் வழங்கும் பதில்கள்.!

வயர்லெஸ் சார்ஜ்

வயர்லெஸ் சார்ஜ்

மெக்ரூமர்ஸ் அறிக்கையின்படி ஐபோன் 8 கருவி உட்பட இந்தாண்டு வெளியாகும் அனைத்து மூன்று ஐபோன் மாதிரிகளிலும் வயர்லெஸ் சார்ஜ் எதிர்பார்க்கப்படுகிறது.

3டி டச்

3டி டச்

மேலும் வெளியாகும் கருவிகள் ஒரு சிறிய அளவிலாக சூடாக்குகின்ற பிரச்சனை இருப்பதாகவும் அதை தடுக்கும் வண்ணம் சாதனத்தில் 'கூடுதல் கிராஃபைட் தாள் அடுக்கு' கொண்ட ஒரு புதிய 3டி டச் தொகுதி சேர்க்கப்படும் என்றும் லீக்ஸ் தகவல்கள் அறிவிக்கிறது.

நிலையான செயல்பாடு

நிலையான செயல்பாடு

ஐபோன் 8 வயர்லெஸ் சார்ஜ் அறிக்கையில் "பொதுவான பயனர்களுக்கு எந்த வேறுபாடும் இக்கருவிகளில் அறியப்படக்கூடாத வண்ணம் ஒரு கூடுதல் கிராஃபைட் தாள் அடுக்கு மூலம் ஒரு சிறந்த வெப்ப கட்டுப்பாட்டை அமைக்கவுள்ளோம். இதன் மூலம் நிலையான செயல்பாடு உறுதி செய்யப்படும் மற்றும் ஓல்இடி ஐபோனில் 3டி டச் சென்சார் மிகவும் உணர்திறன் கொண்டதாய் இருக்கும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த புதிய 3டி டச் தொகுதி வடிவமைப்பு சுமார் 5 டாலர்கள் செலவு பிடிக்கும் (சுமார் ரூ. 300) மேலும் ஐபோன் 8 கருவியானது சுமார் 1000 டாலர்கள் விலை நிர்ணயம் பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உடன் ஓல்இடி டிஸ்ப்ளே எல்சிடி திரைகளும் விலை உயர்ந்தவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஓல்இடி டிஸ்ப்ளே எல்சிடி

ஓல்இடி டிஸ்ப்ளே எல்சிடி

ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் ஆகிய இரண்டு மாதிரிகளிலும் ஓல்இடி டிஸ்ப்ளே எல்சிடி திரை இருப்பதற்க்கான எந்த அறிவிப்பும் கிடையாது.

15 அடி தூரத்தில்

15 அடி தூரத்தில்

ஐபோன் 8 வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பம் எனது தற்போதைய நடைமுறையில் வியத்தகு விடயமாகும். ஆரம்பத்தில் ஒரு கசிவு போன்றே வெளியான இந்த அம்சம் நிஜமாகவே ஐபோன்களில் இடம்பெறும் என்பதுபோல் தான் தெரிகிறது. இதன் மூலம் சுமார் 15 அடி தூரத்தில் இருந்துகொண்டு கூட பயனர்களால் சார்ஜ் செய்து விட முடியும்.

சார்ஜ் செய்யும் போது

சார்ஜ் செய்யும் போது

தற்போதைய வயர்லெஸ் தகடுகள் ஆனது தொலைபேசி இயக்கத்தை அனுமதிக்காது அதாவது நீங்கள் சார்ஜ் செய்யும் போது தொலைபேசி பயன்படுத்த முடியாது.

சந்தேகமே வேண்டாம்

சந்தேகமே வேண்டாம்

வெளியான ஐபோன் 8 வதந்திகள் அனைத்தும் உண்மையாக இருந்தால் இக்கருவிகள் நிச்சயமாக ஆஹா ஓஹோவென புகழப்படும் கருவிகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2017-ல் அதிரடி காட்டப்போகும் நோக்கியாவின் புத்தம் புதிய மாடல்கள்.!

Best Mobiles in India

English summary
iPhone 8 May Use New 3D Touch Module to Prevent Overheating by Wireless Charging. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X