காப்பிஅடிப்பதை ஆப்பிள் நிறுத்தாது போல, அட போங்கடா அப்ரசண்டிகளா.!

சமீபத்தில் ஐபோன் 8 வடிவமைப்பு சார்ந்த தகவலொன்று இக்கருவி பெரும் மாற்றங்களை கொண்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்வரும் ஐபோன் 8 பற்றி பல செய்திகள், விவரங்கள் மற்றும் வதந்திகள் தொடர்ச்சியான நேர இடைவெளியில் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனமோ தொடர்ந்து பிடிகொடுக்காமல் எந்தவொரு தகவலையும் உறுதி செய்யாமல் அமைதி காத்து வருகிறது.

ஆனால் மறுபக்கம் ஐபோன் 8 வெளியீட்டு தேதி நெருங்குவதால் இக்கருவி சார்ந்த கசிவுகள் அதிகமாகியுள்ளன. அப்படியாக சமீபத்தில் ஐபோன் 8 வடிவமைப்பு சார்ந்த தகவலொன்று இக்கருவி பெரும் மாற்றங்களை கொண்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது.

ஸ்க்ரீன் ப்ரொடக்டர்

ஸ்க்ரீன் ப்ரொடக்டர்

இத லீக்ஸ் தகவலை டிப்ஸ்டர் @ VenyaGeskin1 மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள புகைப்படத்தில் கூறப்படும் ஐபோன் 8 ஸ்க்ரீன் ப்ரொடக்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் தலைமை சாதனத்தின் புதிய வடிவமைப்பு சார்ந்த ஒரு கண்ணோட்டம் கிடைக்கிறது.

பெஸல்லெஸ் டிஸ்பிளே

பெஸல்லெஸ் டிஸ்பிளே

இந்த ஸ்க்ரீன் ப்ரொடெக்டர், இக்கருவி ஒரு பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்டு வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது கேலக்ஸி 8 எஸ் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் வரவிருக்கும் நோட் 8 சாதனத்திலும் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெரிய திரை

ஒரு பெரிய திரை

குறுகிய பெஸல்கள் உதவியுடன், ஆப்பிள் ஏற்கனவே உள்ள 4.7 அங்குல மாதிரி போன்றே கிட்டத்தட்ட அதே பரிமாணங்களை கொண்ட ஒரு கருவியில் ஒரு பெரிய திரை வழங்க முடியும்.அதாவது ஒரு சிறிய தொலைபேசியில் பெரிய காட்சி, இது அசல் ஐபோன் உடன் இணைந்திருக்க விரும்பும் ஆப்பிள் பயனர்களுக்கு மறுக்க முடியாது ஒரு வாய்ப்பாக உள்ளது.

கருவிழி ஸ்கேனிங்

கருவிழி ஸ்கேனிங்

மேலும், இந்த ஸ்க்ரீன் ப்ரொடெக்டர் ஆனது ஐபோன் 8 சாதனத்தில் புதிய கேமராக்கள் பொறுத்தப்படலாம் என்ற தகவலையும் வெளிப்படுத்துகிறது. பேஸ்டைம் மட்டம் செல்பீ செல்பீ கேமராவுடன் கூடுதலாக, ஐபோன் 8 கருவியானது முக அடையாளம் மற்றும் கருவிழி ஸ்கேனிங்கிற்காக புதிய கேமராக்கள் பெறுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டச் ஐடி

டச் ஐடி

சாம்சங் போன்ற போட்டி நிறுவனத்தின் அம்சங்களை பின்பற்றி ஆப்பிள் அதன் கருவியில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பணியாற்றுகிறது. மேலும் இதன் புதிய கேமிராக்கள் ஐபோன் வாங்குவோர்களுக்கான கூடுதல் பாதுகாப்பு அமைப்பை வழங்க முயற்சிக்கின்றன. இதன் மூலம் இக்கருவி டச் ஐடி அம்சத்தை விட்டுக்கொடுக்கிறது என்று அர்த்தம் இல்லை. ஏற்கனவே உள்ள ஊகத்தின் கீழ் புதிய கைரேகை சென்சார் ஆனது டிஸ்பிளேவுடன் ஒருங்கிணைக்கப்படலாம்.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இதன் பொருள், ஆப்பிள் மிகச் சமீபத்திய ஆண்ட்ராய்ட் போன் உற்பத்தியாளர்களின் தொலைபேசியின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வைத்திருக்கும் நேரத்தில் இது புதிய தொழில்நுட்பமாக திகழலாம். என்று அர்த்தம். எனினும், இந்த கசிவுகள் துல்லியமானதாக இருக்கும் என்பதில் உறுதித்தன்மை இல்லை. மறுபக்கம் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் நாம் அதிகாரப்பூர்வ தகவலுடன் சேர்த்து மேலும் பல தகவலை காண்போம்.

Best Mobiles in India

English summary
iPhone 8 may have a bezel less display, leaks spotted. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X