செப்டம்பர் 12: மிரட்டலான ஐபோன் 8 அறிமுகம்.!

By Prakash
|

அனைவரும் எதிர்பார்த்த மிரட்டலான ஐபோன் 8 வரும் செப்படம்பர் 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் உலகளவில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபோன் 8 மாடல், இக்கருவி கூடுதலாக 512ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8 பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, இக்கருவி ஒஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, 3டி அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபோன் 8 மாடல்.

இயங்குதளம்:

இயங்குதளம்:

ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஐபோன் 8 மாடல், அதன்பின் குவாட்-கோர் செயலி இவற்றில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, 3டி அம்சங்கள் இவற்றுள் சேர்க்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 4.7-இன்ச் முழு எச்டி ஒஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (750-1330)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது, மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

ஐபோன் 8 பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஐபோன் மாடல்.

டூயல் ரியர் கேமரா:

டூயல் ரியர் கேமரா:

இந்த ஐபோன் 8 மாடல் டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, 3டி சென்சார் முன்புற கேமராஅமைப்பு கொண்டுள்ளது இந்த ஐபோன் மாடல்.

செப்டம்பர் 12:

செப்டம்பர் 12:

செப்டம்பர் 12ஆம் தேதி இந்த ஐபோன் 8 மாடல் அறிமுகப்படுத்தப்படும், அதன்பின் செப்டம்பர் 15ஆம் தேதி முதல்இதன் முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி இக்கருவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 8 to Launch on September 12 512GB Variant Expected; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X