ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் : அதிரடி கேஷ்பேக் ஆஃபர்.!

By Prakash
|

இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை, பெற்றுள்ளது இந்த ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மாடல்கள், தற்சமயம் இந்த ஐபோன் மாடல்களுக்கு ரூ.15,000 வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் ஆஃபர் பொறுத்தவரை பேடிஎம் மூலம் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் : அதிரடி கேஷ்பேக் ஆஃபர்.!

இந்த சலுகையை வழங்க பேடிஎம் மற்றும் எஸ் வங்கி கூட்டுசேர்ந்துள்ளன, மேலும் இந்த ஆஃபரை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் ஆஃபர் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஐபோன் மாடல்களை அமேசான்மற்றும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் முறையே 4.7-இன்ச் மற்றும்5.5-இன்ச் ரெட்டனா டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்புபுதிய கிளாஸ் மற்றும் அலுமினியம் வடிவமைப்பு கொண்டுள்ளது..

ஐஒஎஸ்11:

ஐஒஎஸ்11:

இந்த ஐபோன் மாடல்கள் ஐஒஎஸ்11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டிவசதி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஃபாஸ்ட் சார்ஜிங்:

ஃபாஸ்ட் சார்ஜிங்:

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டிருப்பதால் முப்பது நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் மாடல்கள்.

விலை:

விலை:

அமெரிக்காவில் இந்த போன்களுக்கு மிகப் பெரிய வரவேற்ப்பு கிடைத்துள்ளது. ஐபோன் 8 64ஜிபி மற்றும் 256ஜிபி முறையேரூ.64,000 மற்றும் ரூ.77,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 8 பிளஸ் 64ஜிபி மற்றும் 256ஜிபி முறையே ரூ.73,000மற்றும் ரூ.86,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 8 iPhone 8 Plus Available With Up to Rs 15000 Cashback on Paytm ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X