ஐபோன் 8 லீக்ஸ் : டிஸ்பிளே அளவீடுகள்.!

By Prakash
|

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடுஅறிவிப்பு நடக்க சில மாதங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும் அவற்றில் ஐபோன் 8 பற்றிய முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை ஐபோன் 8 தொடர்பான கசிவுகள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஐபோன் 8 லீக்ஸ் : டிஸ்பிளே அளவீடுகள்.!

ஐபோன் 8 இன்ட்பில்ட் டச் ஐடி சென்சார் இணைந்து ஒரு ஓல்இடி காட்சி இதனுடன் அமைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட சில மாதங்கள் முன்னதாகவே ஐபோன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு துவங்குகிறது என்றும், இம்முறை 300 சதவிகிதம் வரை கூடுதலான சாதனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலாண்டு மொத்த ஐபோன்களின் எண்ணிக்கை 45 மில்லியனில் இருந்து 48 மல்லியன் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபோன் 8 வெளியாக இருக்கும் நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளில் ஐபோன் 8 போனினை எதிர்பார்க்கலாம்.

அதன் படி ஐபோன் 8இல் 3டி டூயல் லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு வழங்கப்படலாம். இதற்கென ஆப்பிள் நிறுவனம் லின்க்ஸ் எனும் இஸ்ரேலிய நிறுவனத்தை சமீபத்தில் கைப்பற்றியது.

கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 பிளஸ், மற்றும் கூகிள் பிக்சல் போன்ற மற்ற பிரபல ஸ்மார்ட்போன்களை விட மிக அதிகமான செயல்திறன் ஆற்றலைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
iPhone 8 display leaked once again reveals device dimension : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X