ஐபோன் 8, ஐபோன் 8பிளஸ் சாதனங்களை இனி வாங்க முடியாது.!

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அருமையான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது, இந்நிலையில் ஐபோன் எஸ்இ202 மாடலை அறிமுகம் செய்த கையோடு ஐபோன்8 மற்றும் ஐபோன் 8பிளஸ் விற்பனையை நிறுத்தியுள்ளது.

ஐபோன் எஸ்இ2020

அதாவது ஐபோன் எஸ்இ2020 ஆனது அடிப்படையில் பிளஸ் பதிப்பு இல்லாத ஐபோன்8-க்கு அடுத்தபடியான மாடலாக இருப்பதால் இது ஒன்றும் எதிர்பாராத ஒரு நடவடிக்;கை அல்ல. மேக்ரூமர்ஸின் கூற்றுப்படி ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8பிளஸ் மாடல்களை இனி ஆப்பிள் நிறுவனத்தால் விற்கப்பட மாட்டாது. ஆனால் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இ-காமர்ஸ் வலைதளங்களில் கிடைக்கும். மேலும் இது தேர்ந்தெடுக்;கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

 ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8பிளஸ்

குறிப்பாக ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8பிளஸ் ஆகியவை செப்டம்பர் 2017-ம் ஆண்டு ஐபோன் எக்ஸ் உடன் வெளியிடப்பட்டன. பின்னர் ஐபோன் 8 மற்றும் 8பிளஸ் சாதனஙகள் ஆனது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸின் வாரிசுகளாக இருந்தன. மேலும் இப்போது வெளியிடப்பட்ட ஐபோன் எஸ்இ2020 மாடல்களின் சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அங்க தான் அப்படினா.,இங்கயும் இப்படியா?-6 மாதத்திற்கு பிறகு பூமிக்கு வரும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்அங்க தான் அப்படினா.,இங்கயும் இப்படியா?-6 மாதத்திற்கு பிறகு பூமிக்கு வரும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்

ஐபோன் SE (2020) நி

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் வரிசையிலிருந்துவந்த இடைவெளியை இந்த போன் நிரப்புகிறது மற்றும் புதிய ஜென் ஐபோனை அட்டவணையில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) அளவிலும் சிறியதாக உங்கள் பாக்கெட்டிற்குள் அடங்கும்படி எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஆப்பிள் ஐபோன் SE

இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், கோவிட் 19 இன் தாக்குதல் மற்றும் விரைவான பரவல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்து, ஏப்ரல் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டது. இதன்படி, நேற்று ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020)
அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்

A13 பயோனிக் சிப்செட்
64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே, 625
நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன்
12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா
ட்ரு டோன் பிளாஷ்
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா?

IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா?

7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2) முன்பக்க செல்ஃபி கேமரா
டச் ஐடி பட்டன்
IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு
4ஜி வோல்ட்இ
வைஃபை 802.11ax
வைஃபை கால்லிங்
NFC
புளூடூத் v5.0

ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ்

Qi வயலெஸ் சார்ஜிங்
ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ்
லைட்டின்ங் போர்ட்
3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது
Qi வயலெஸ் சார்ஜிங்
138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ரேம் தகவல்களை நிறுவனம் எப்பொழுதும் போல் வழங்கவில்லை.

ஐபோன் SE (2020) விலை

ஐபோன் SE (2020) விலை

ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய விலை தோராயமாக ரூ.30,600 ஆகும்.
ஐபோன் எஸ்இ (2020) 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய விலை தோராயமாக ரூ.38,200 ஆகும்.
ஐபோன் எஸ்இ (2020) 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய விலை தோராயமாக ரூ.45,000 ஆகும்.

முன்பதிவு மற்றும் விற்பனை விபரங்கள்

முன்பதிவு மற்றும் விற்பனை விபரங்கள்

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என்ற 3 வேரியண்ட் மாடல்களாக கிடைக்கிறது. இந்த ஐபோன் சாதனத்திற்கான அமெரிக்கா முன்பதிவு ஏப்ரல் 17ம் தேதி முதல் துவங்குகிறது மற்றும் இதன் விற்பனை ஏப்ரல் 24ம் தேதி முதல் துவங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா விற்பனை பற்றிய தகவல்கள்
விரைவில் வெளியிடப்படும்.

Best Mobiles in India

English summary
iPhone 8 and iPhone 8 Plus discontinues in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X