பெங்களூரில் தயாராகும் ஆப்பிள் ஐபோன்.!
இந்தியாவில் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை நல்ல வரவேற்பு ஆப்பிள் ஐபோன்களுக்கு இருக்கின்றது. இந்நிலையில் ஐபோன் 7 இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது.
ஐப்பிள் நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
இந்த நிறுவனத்தின் போன்களை ஹேக் செய்வது கடினம்.
இந்தியாவில் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை நல்ல வரவேற்பு ஆப்பிள் ஐபோன்களுக்கு இருக்கின்றது.

இந்நிலையில் ஐபோன் 7 இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது.

ஐபோன் 7 :
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 செல்போன்கள் தயாரிக்கும் பணி பெங்களூரில் துவங்கியுள்ளது.

பெங்களூர் ஆலை:
இந்நிலையில் தற்போது ஐபோன் 7ஐ பெங்களூரில் அமைந்துள்ள தனது ஆலையில் விஸ்ட்ரான் தயாரித்து வருகின்றது. மார்ச் மாதத்தில் தயாரிப்பு பணி துவங்கி விட்டது.

தைவான் நிறுவனம்:
தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் என்ற நிறுவனம் தான் ஆப்பிள் ஐபோன் எ1;, மற்றும் ஐபோன் 6 எஸ் ஆகிய செல்போன்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரித்து வழங்கி வருகிறது.

பெருமை கொள்வதாக அறிவிப்பு:
இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்காக பெங்களூருவில் ஐபோன் 7ஐ தயாரிப்தில் பெருமை கொள்வதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

விலை குறைய வாய்ப்பு?
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், இதன் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என நிபணர்கள் கருத்து தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications