இதோ வரபோகிறது ஆப்பிளின் அடுத்த படைப்பு!!!

|

WWDC 2013 நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ்7 (ios 7) எனும் புதிய ஓஎஸ் யை(os) வெளியிட்டது.. இது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது..ஐஓஎஸ்7 உடன் ஆப்பிளின் ஐபோன் 6 வெளிவரக் கூடும் என்று பரவலாக பேசபபட்டது

இதனுடைய வடிவமைப்பு மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய எதிர்பார்பும் ஆப்பிளின் அடுத்த தலைமுறைக்கான ஐபோனாக இது இருக்கும் என்ற எண்ணமும் மக்களிடத்தில் நிலவியது, ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதனை பற்றிய வெளியீடை இன்னும் அறிவிக்கவில்லை.

ஆப்பிள் ஐபோன் வடிவமைப்பாளரான ஆண்டோனியோ டீ ரோசா இதன் மாதிரியை வடிவமைத்துள்ளார் அவரது கற்பனையின் விளைவாக விரைவில் ஐஓஎஸ்7 உடன் கூடிய ஐபோன் 6 வரக்கூடும்.

ADR ஸ்டூடியோ வெளியிட்டுள்ள படத்தில் ஐபோன் 6 பற்றிய சிறப்பு அம்சங்கள் மட்டும் அல்லாமல் அதனை பற்றிய புதிய பரிணாமும் அடங்கியுள்ளது அதில் முக்கியமானது ரெடினா டிஸ்பிளே அதாவது கண்ணின் கரு விழியில் இயங்கும் திரை.

டீ ரோசாவின் எண்ணமான ஐபோன் 6 எல்லோரும் வியக்கும்படி அழகிய பெரிய திரை மற்றும் சிறந்த வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்7 வெளியீடு தனது ரசிகர்களுக்கு அதன் அடுத்த படைப்பான ஐபோன் 6 யை எதிர்நோக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. ஐபோன் 6 வெளிவரவில்லை என்றால் ஐஓஎஸ்7 வெளியிட்டதற்கான அர்த்தமே இல்லாமல் போகும். எது எப்படி என்றாலும் ஐபோன் விரும்பிகளுக்கு இது இனிப்பான செய்தியாகவே இருக்கும்.

கிழே ஐஓஎஸ்7 உடன் வர கூடிய ஐபோன் 6 பற்றிய படங்களும் மற்றும் அதனுள் எதிர்பார்க்கும் சிறப்பு அம்சங்களும் உள்ளது.

Click Here For Apple iPhone 6 Concept Smartphone Gallery

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஐஓஎஸ்7 உடன் கூடிய ஐபோன் 6ன் பெரிய திரை மற்றும் மெளிதான வடிவமைப்பு அதன் அழகிய தோற்றம்..

டச் ஹோம் பட்டன்

டச் ஹோம் பட்டன்

ஐபோன் 6 ஆப்பிள் ஹோமின் டச் பட்டனுடன் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது..

ஜெஸ்டர் பட்டன்

ஜெஸ்டர் பட்டன்

இதன் அழகிய பெரிய திரை மட்டும் அல்லாமல் அதன் கீழ் உள்ள பட்டன்களும் ஐபோன் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது..

கேமரா மற்றும் பிராசஸர்

கேமரா மற்றும் பிராசஸர்

டீ ரோசா இதன் வடிவத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் A7 பிராசஸர் மற்றும் 18 மெகாபிக்சல் கேமராவுடன் இதன் மாதிரியை அமைத்துள்ளார்..

விலை

விலை

ஐஓஎஸ்7 உடன் கூடிய ஐபோன் 6 விரைவில் வரும் என்றும் அதன் விலை முந்தைய ஐபோன்களை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X