விரைவில் வர இருக்கும் ஆப்பிள் ஐபோன்-5 பற்றிய சிறப்பு தகவல்கள்

By Super
|
விரைவில் வர இருக்கும் ஆப்பிள் ஐபோன்-5 பற்றிய சிறப்பு தகவல்கள்
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மகிமையை சொல்லி தெரியவேண்டாம். மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான போன் மாடல்கள் உலவினாலும், ஐபோனை மிஞ்ச இன்னும் ஒரு போன் வரவில்லை என்றுதான் கூறவேண்டும்.

நேர்த்தியான வடிவமைப்பு, செயல்திறன், வேகம் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுவதால், ஐபோன்கள் மார்க்கெட்டில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து வைத்துள்ளன.

வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஐபோன்-4 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் ஐபோன்-5 மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அம்சங்களில் ஐபோன்-4ஐ ஒத்திருந்தாலும், எடையிலும், வடிவமைப்பிலும் சில மாறுதல்களுடன் ஐபோன்-5 வர இரு்ப்பதாக தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன்-5 சிறப்பம்சங்கள் குறித்த சில தகவல்கள் தற்போது மார்க்கெட்டில் கசிய துவங்கியுள்ளன. அவற்றை இங்கே காணலாம்.

1.5 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸருடன் ஏ-5 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

அலுமினியம் கோட்டிங் செய்யப்பட்ட பின்பக்க பேனல்

ஆற்றல்வாய்ந்த ஆன்டெனா

1ஜிபி ரேம்

1080பி வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 8 மெகாபிக்செல் கேமரா

வயர்லெஸ் சார்ஜிங்

4.0 இஞ்ச் டிஸ்பிளே

ஐஓஎஸ்- 5 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

4ஜி கனெக்ட்டிவிட்டி

மோஷன் சென்சிங் வீடியோ கேமிங் மற்றும் கிராபிக்ஸ் பிராசஸர்

பிரமாதமான பேட்டரி பேக்கப்

ஆகிய அம்சங்களுடன் ஐபோன்-5 மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X