ப்ரீ-ஆர்டரில் ஆப்பிள் ஐபோன்-5!

கடந்த செப்டம்பர் 12ம் தேதி தாந் இந்த புதிய ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. நமது நாட்டில் இந்த பிரம்மாண்டமான ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த சூப்பர் ஸ்மார்ட்போனுக்கு ஃப்ரீ-ஆர்டரும் ஆரம்பமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தநது 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினை மூலம் ரெட்டினா திரை வசதியினையும் வழங்கும்.
இதில் 1136 X 640 பிக்ஸல் திரை வசதியினை கொடுக்கும். 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் முகப்பு கேமராவினையும் சிறப்பாக இதில் பெற்று பயனடையலாம். சிறப்பான துல்லியத்தினை கொடுக்கும் இந்த கேமராவின் மூலம் அற்புதமான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.
112 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் புதிய ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்பது இன்னும் புதுமையான விஷயம். இதன் மூலம் 200 புதிய வசதிகளை கொண்ட தொழில் நுட்ப வசதிகளை பெற முடியும். இந்த ஐபோன்-5 16 ஜிபி மாடல் ரூ. 45,000 விலையினையும், 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 50,000 விலையினையும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி ப்ரீ-ஆர்டரின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் எவ்வளவு விலையினை கொண்டதாக இருக்கும் என்பது பற்றிய தகவல்களை பொருத்திருந்து பெறலாம். இதில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதி மாடல்களை கொண்டு அதிகமான ஸ்டோரேஜ் வசதிகளை பெற முடியும்.


Click it and Unblock the Notifications