தீபாவளி ரிலீஸாக ஐபோன்?

நமது நாட்டில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்த்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அக்டோபரிலிருந்து நவம்பர் மாதத்திற்குள் அறிமுகமாகலாம் என்ற புதிய தகவல்கள் வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
ஏனெனில் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் நாடுகளில் நமது நாடு அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
ஒரு நிறுவனம் புதிய இயங்குதளத்தினை அறிமுகம் செய்கிறது என்ற செய்தியை கேட்டாலே, வாடிக்கையாளர்களின் ஆர்வம் சொல்ல வேண்டியதில்லை.
அந்த வகையில் ஆப்பிளின் புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-6, கிட்டத்தட்ட 200 புதிய வசதிகளை வழங்கும் தொழில் நுட்பங்களை கொண்டிருக்கிறது என்கிற போது, வாடிக்கையாளர்களின் பள்ஸ் ரேட்டை அசால்ட்டாக எகிற வைக்கிறது.
இன்று அதிகமானோர் எப்போதும் அமர்ந்திருப்பது கம்ப்யூட்டர் முன் தான், என்றாலும் அதிலும் அதிக நேரம் இருப்பது ஃபேஸ்புக். இந்த ஃபேஸ்புக்கிற்காக பல புதிய வசதிகளையும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் பெறலாம். ஆப்பிள் ஸ்டோரில் இருக்கும் அப்ளிக்கேஷன்களை ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் 'லைக்' செய்ய முடியும்.
பிறகு ஃபேஸ்புக் நண்பர்களின் பிறந்த நாளை ஐபோன் காலன்டரின் மூலமும் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய வசதிகளையும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் பெற முடியும்.
இதனால் ஆப்பிளின் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இந்தமுறை தீபவளி ரிலீசாக கூட இருக்கலாம் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications